- செப்டம்பர் 2023 இல் லான்ச் ஆகும்
- ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யுவி எலிவேட்டை ஹோண்டா 6 ஜூன் 2023 அன்று நாட்டில் காட்சிப்படுத்தியது. சிட்டி மற்றும் அமேஸுக்குப் பிறகு நிறுவனத்தின் பட்டியலில் சேர்க்கப்படும் மூன்றாவது வாகனம் இதுவாகும். செப்டம்பர் 2023 இல் வெளியிடப்படும் எலிவேட்டின் மைலேஜை ஹோண்டா வெளிப்படுத்தியுள்ளது.
ஹோண்டா எலிவேட் இன்ஜின் மற்றும் ஃப்யூல் எஃபிஷியன்சி
ஹோண்டா எலிவேட் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 119bhp மற்றும் 145Nm டோர்க்கை உருவாக்குகிறது. இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. எலிவேட்டின் மேனுவல் வேரியண்ட் லிட்டருக்கு 15.31 கி.மீ மைலேஜையும், சிவிடீயின் ஃப்யூல் எஃபிஷியன்சி லிட்டருக்கும் 16.92 கி.மீ மைலேஜையும் தருவதாக நிறுவனம் கூறியுள்ளது.
ஹோண்டா எலிவேட்டின் ஃபீச்சர்ஸ்
இது பிளாக் மற்றும் பெய்ஜ் டூயல் டோன் தீமில் கிடைக்கிறது. வயர்லெஸ் மொபைல் இணைப்புடன் கூடிய பெரிய 10.25-இன்ச் ஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், ஹோண்டா கனெக்ட், ஹோண்டா சென்சிங் ஏடாஸ் டெக்னாலஜி, ஆம்பியன்ட் லைட்டிங், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வென்டிலேடெட் சீட்ஸ் உடன் எலிவேட் வருகிறது.
2023 ஹோண்டா எலிவேட் வண்ண விருப்பங்கள்
எலிவேட் ஃபைவ் சீட்டர் எஸ்யுவி ஃபீனிக்ஸ் ஆரஞ்சு பேர்ல், அப்சிடியன் ப்ளூ, ரேடியன்ட் ரெட், பிளாட்டினம் ஒயிட், கோல்டன் ப்ரௌன், லூனார் சில்வர் மற்றும் மீடீஓரொய்ட் க்ரே ஆகிய ஏழு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்
ஹோண்டா எலிவேட் வீடியோ
மேலும் இது போன்ற வீடியோஸைப் பார்க்க கார்வாலே யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும்