- ரூ.21,000 க்கு முன்பதிவு செய்யலாம்.
- க்ரெட்டா மற்றும் கிராண்ட் விட்டாராவுக்கு போட்டியாக இருக்கும்
எலிவேட் எஸ்யுவியின் விலைகள் செப்டம்பர் 4, 2023 அன்று அறிவிக்கப்படும் என்று ஹோண்டா கார்ஸ் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. க்ரெட்டா மற்றும் செல்டோஸ் போட்டியாளர் பிராண்டின் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் என்ட்ரியை குறிக்கும் மற்றும் சிட்டி மற்றும் அமேஸ் செடான்ஸுடன் விற்பனை செய்யப்படும்.
ஹோண்டா எலிவேட்டின் வேரியண்ட் மற்றும் ஃபீச்சர்ஸ்
எலிவேட்டுக்கான முன்பதிவு ரூ.21,000 மற்றும் இது ஏழு மோனோடோன் மற்றும் மூன்று டூயல்-டோன் வண்ணங்களில் SV, V, VX மற்றும் ZX வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது.
ஹைப்ரிட் இன்ஜினை எலிவேட் தவறவிட்டாலும், எஸ்யுவி ஆனது எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் பேட், 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆறு ஏர்பேக்ஸ், ஒரு ப்ளைன்ட்-ஸ்பாட் மொனிட்டர் மற்றும் பல ஏடாஸ் போன்ற நவீன அம்சங்களை வழங்குகிறது. அம்சங்கள்.
எலிவேட் மைலேஜ் மற்றும் இன்ஜின் விவரங்கள்
எஸ்யுவி ஆனது 119bhp மற்றும் 145Nm பீக் டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்படும், சிங்கிள் 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிவிடீ யூனிட்டில் இருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முடியும். மேனுவல் வேரியண்ட்ஸ் லிட்டருக்கு 15.31 கி.மீ மைலேஜை வழங்குவதாக ஹோண்டா தெரிவித்துள்ளது, அதேசமயம் சிவிடீ வேரியண்ட்ஸில் லிட்டருக்கு 16.92 கிமீ மைலேஜ் ஏஆர்ஏஐ-ஆல் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
ஹோண்டா எலிவேட் போட்டியாளர்கள்
அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் போது, எலிவேட் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற மாடல்ஸ்க்கு போட்டியாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்