- எலிவேட் ஜூன் 6 ஆம் தேதி இந்தியாவில் அதன் முதல் காட்சியை வெளியிடுகிறது
- க்ரெட்டா, செல்டோஸ், கிராண்ட் விட்டாரா மற்றும் பலருக்கு போட்டியாக இருக்கும்
ஹோண்டா எலிவேட் இந்தியாவில் அறிமுகம்
இந்தியாவில் ஜூன் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தனது உலக அறிமுகத்திற்கு முன்னதாக, எலிவேட் மிட்-சைஸ் எஸ்யுவியை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஹோண்டா தொடர்ந்து டெஸ்டிங் செய்து வருகிறது. ஜப்பானில் எடுக்கப்பட்ட மாடலின் புதிய ஸ்பை ஷாட்ஸ் மாடலின் மற்றொரு, லைட்-கமௌபிளாஜ்ட் டெஸ்ட் ம்யூலை வெளிப்படுத்துகின்றன.
புதிய ஹோண்டா எலிவேட் ஸ்பை ஷாட்ஸ்: அதில் என்ன வெளிப்படுத்துகின்றன?
படங்களில் காணப்படுவது போல், புதிய ஹோண்டா எலிவேட் ரியர் வைப்பர் மற்றும் வாஷர், இன்டீக்ரேடெட் ஸ்பாய்லர், ரியர் பம்பர் பொருத்தப்பட்ட ரிஃப்ளெக்டர்ஸ், டெயில்கேட்டில் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட் ஹோல்டர், 360 டிகிரி கேமரா, புதிய மல்டி-ஸ்போக் அலோய் வீல்ஸ் பிளாக் நிறத்தில் இருக்கும், மற்றும் முன் கதவு பொருத்தப்பட்ட ஓஆர்விஎம்ஸ். டூ-பீஸ் எல்இடி டெயில் லேம்ப்ஸ் நிறுத்தப்பட்ட டபிள்யூஆர்-வி-யை நினைவூட்டும் வகையில் தெரிகிறது.
2023 ஹோண்டா எலிவேட் அம்சங்கள்
மற்ற இடங்களில், 2023 ஹோண்டா எலிவேட் எலக்ட்ரிக் சன்ரூஃப், ரூஃப் ரெயில்ஸ், முன் மற்றும் பின்புற எல்இடி லைட் பார்ஸ், ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றைப் பெறும். ஏடாஸ், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, எல்இடி டிஆர்எல்ஸ் மற்றும் ஃபாக் லைட்ஸ் போன்ற அம்சங்களையும் வழங்கப்படும் என்று மாடலுடன் லான்ச்சில் எதிர்பார்க்கிறோம்.
ஹோண்டா எலிவேட் இன்ஜின், விவரக்குறிப்புகள் மற்றும் போட்டியாளர்கள்
வரவிருக்கும் ஹோண்டா எலிவேட்டின் பவர்ட்ரெயின் விருப்பங்கள் குறித்த விவரங்கள் தற்போது தெரியவில்லை. இந்த மிட்-சைஸ் எஸ்யுவி புதுப்பிக்கப்பட்ட சிட்டி ரேஞ்ச் இல்ருந்து அதன் இன்ஜின்ஸை வாங்கலாம், இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் மில் ஆகியவை அடங்கும். எலிவேட் மாருதி கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஆஸ்டர், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்