- ஹோண்டா எலிவேட்டின் விலை செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும்
- எலிவேட்டின் முன்பதிவு ரூ.21,000 இல் டோக்கன் மூலம் தொடங்கப்பட்டது
ஹோண்டா எலிவேட் புக்கிங் மற்றும் லான்ச்
ஹோண்டா கார்ஸ் இந்தியா, நாட்டில் எலிவேட் மிட்-சைஸ் எஸ்யுவிக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக ரூ.21,000 இல் தொடங்கப்பட்டது. கடந்த மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்ட இந்த மாடல், இந்த ஆண்டின் செப்டம்பர் மாததில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஹோண்டா எலிவேட் எக்ஸ்டீரியர் டிசைன்
புதிய ஹோண்டா எலிவேட்டின் எக்ஸ்டீரியர் டிசைனில், ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டிஆர்எல்’ஸ், குரோம் இன்சர்ட்ஸ் கூடிய பெரிய கிரில், ஃப்ரண்ட் பம்பரின் இருபுறமும் ஃபோக் லைட்ஸ், 16-இன்ச் டூயல்-டோன் அலோய் வீல்ஸ், ரேப்பரவுண்ட் டூ-பீஸ் எல்இடி, டெயில் லைட்ஸ், பூட் ஸ்பேஸில் உள்ள டெயில் லைட்ஸ் இடையே ஒரு ரிஃப்ளெக்டர், சில்வர் ஃபினிஷில் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்ஸ், ரூஃப் ரெயில்ஸ் மற்றும் ஒரு ஷார்க்-ஃபின் ஆண்டெனா ஆகியவை அடங்கும்.
ஹோண்டா எலிவேட் இன்டீரியர் மற்றும் அம்சங்கள்
2023 எலிவேட் மிட்-சைஸ் எஸ்யுவியில் எலக்ட்ரிக் சன்ரூஃப், 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, லேன்வாட்ச் டெக், விஎஸ்ஏ, எச்எஸ்ஏ, டூயல் ஏர்பேக்ஸ், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 7 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர். மேலும் ஒரு ஏடாஸ் தொகுப்பும் வழங்கப்படும்.
எலிவேட் இன்ஜின் விவரக்குறிப்புகள்
ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் ஆகியவற்றுக்கு போட்டியாக எலிவேட் இருக்கும், இதில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் மற்றும் சிவிடீ யூனிட்டுடன் 1.5 லிட்டர் ஐவிடெக் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். இந்த மோட்டார் 119bhp மற்றும் 145Nm டோர்க்கை வெளியிடும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இதில் ஹைப்ரிட் வெர்ஷன் இருக்காது, மாறாக, 2026 இல் எலிவேட்டின் இவி வெர்ஷனை ஹோண்டா வெளியீடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்
ஹோண்டா எலிவேட் வீடியோ
மேலும் இது போன்ற வீடியோஸைப் பார்க்க கார்வாலே யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும்