இந்தியாவில் ப்ரீமியம் கார்ஸை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா எலிவேட் என்ற மிட்-சைஸ் எஸ்யுவிக்கான மெகா டெலிவரி நிகழ்வை சென்னையில் கொண்டாடியது. இந்த நிகழ்வு ஒரே நாளில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஹோண்டா எலிவேட் எஸ்யுவிஸின் டெலிவரியை குறிக்கிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹோண்டா எலிவேட், இறுதியாக இந்திய சாலைகளில் அறிமுகமாகியுள்ளது, இது ரூ.13.40 ஆரம்ப விலையுடன் மற்றும் டாப் வேரியண்ட்டிற்கு ரூ.19.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், சென்னையில்) வரை விலையில் உள்ளது.
ஹோண்டா எலிவேட் 1.5 லிட்டர், ஃபோர்-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் 119bhp மற்றும் 145Nm டோர்க்கை வெளிப்படுத்துகிறது. இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது செவன்-ஸ்பீட் சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட், மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் டைரக்டர்யுய்ச்சி முராடா கூறுகையில், “நாங்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யுவியான ஹோண்டா எலிவேட்டின் மெகா டெலிவரி நிகழ்வை இன்று சென்னையில் கொண்டாடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்திய நுகர்வோருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது, எலிவேட்டின் போல்டு ஸ்டைலிங் மற்றும் ஈர்க்கக்கூடிய உட்புறங்கள், அதன் உலகளாவிய வெளியீட்டில் இருந்து சந்தையில் அதிக ஆர்வத்தைப் பெற்றுள்ளன. இந்த அமோக வரவேற்பு, தயாரிப்பு மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு சான்றாகும்.' என்று அவர் கூறினார்