- இந்தியாவில் ஆரம்ப விலை ரூ. 11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- இந்தியா முழுவதும் மெகா டெலிவரி நிகழ்வுகளை நடத்துவதற்காக பிராண்ட் திட்டமிடுகிறது
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், அதன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மிட்-சைஸ் எஸ்யுவியான எலிவேட்டின் டெலிவரியை தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஒரே நாளில் 100 யூனிட் எலிவேட் டெலிவரி செய்யப்பட்டது. மேலும், இந்த பிராண்ட் இந்தியா முழுவதும் இதுபோன்ற டெலிவரி நிகழ்வுகளை நடத்தத் தொடங்கும்.
எலிவேட் எஸ்யுவி நான்கு வகைகளில் கிடைக்கிறது - SV, V, VX மற்றும் ZX, ஆரம்ப விலை ரூ. 11 லட்சம். க்ரெட்டா போட்டியாளர் எஸ்யுவி ஆனது 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினுடன் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 119bhp மற்றும் 145Nm பீக் டோர்க்கை உருவாக்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.
பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் காலநிலை கட்டுப்பாடு, க்ரூஸ் கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், வயர்லெஸ் சார்ஜர், ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ADAS சூட் போன்ற அம்சங்களுடன் எலிவேட்டின் சிறந்த ZX மாறுபாடு உள்ளது. இதற்கிடையில், இந்தியாவின் 10 நகரங்களில் ஹோண்டா எலிவேட் எஸ்யுவியின் ஆன்ரோடு விலைகளை பட்டியலிட்டுள்ளோம்.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் டைரக்டர் யுய்ச்சி முராடா, “இந்த சிறப்பு மற்றும் மறக்கமுடியாத மெகா டெலிவரி நிகழ்வில் எங்களின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யுவி, ஹோண்டா எலிவேட்டை எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்று நாங்கள் ஹைதராபாத்தில் 100 யூனிட் எலிவேட் டெலிவரி செய்கிறோம், அதைத் தொடர்ந்து வரும் நாட்களில் மற்ற நகரங்களில் இன்னும் பல நிகழ்வுகளை வழங்குவோம் என்று நம்புகிறோம்.” என கூறியுள்ளார்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்