- ஹோண்டா தற்போது இந்தியாவில் இரண்டு செடான் கார்ஸை மட்டுமே விற்பனை செய்து வருகிறது
- ஹோண்டா எலிவேட் இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது
ஹோண்டா கார்ஸ் இந்தியா ஜூன் மாதத்திற்கான அதன் சிட்டி மற்றும் அமேஸ் செடான்ஸுக்கு ரூ.30,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த தள்ளுபடி கேஷ் தள்ளுபடி, ஆக்சஸரீஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் லோயல்டி போனஸ் போன்ற வடிவங்களில் கிடைக்கிறது.
ஹோண்டா அமேஸ் என்ட்ரி-லெவல் செடான் மூன்று வேரியண்ட்ஸில் ரூ.7.01 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வழங்கப்படுகிறது. மறுபுறம், ஃபிஃப்த் ஜெனரேஷன் ஹோண்டா சிட்டி நான்கு வேரியண்ட்ஸில் ரூ.11.52 லட்சம் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது.
ஜூன் 2023 இல் கிடைக்கும் ஹோண்டா சிட்டி மற்றும் அமேஸ் தள்ளுபடிகள் பற்றிய விவரங்கள் கீழே உள்ளன.
தள்ளுபடி | ஹோண்டா சிட்டி | ஹோண்டா அமேஸ் |
கேஷ் தள்ளுபடிஅல்லது இலவச ஆக்சஸரீஸ் | ரூ. 10,000 / 10,946 | ரூ. 10,000 / 12,296 |
லோயல்டி போனஸ் | ரூ. 5,000 | ரூ. 5,000 |
கார்ப்பரேட் தள்ளுபடி | ரூ. 8,000 | ரூ. 6,000 |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் | ரூ. 7,000 | - |
மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள் இடம், டீலர்ஷிப் வேரியண்ட் மற்றும் ஆண்டு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடலாம். மேலும் விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளலாம்.
இதுதவிர, இந்நிறுவனம் இன்று இந்தியாவில் புதிய எலிவேட்டை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த எஸ்யுவி ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா போன்ற கார்ஸுக்கு போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்