• எட்டு மாடல்கள் பாதிக்கப்பட்டன
• ஃபியூல் பம்பில் சிக்கல்
ஹோண்டா கார்ஸ் இந்தியா (HCIL) 90,000 க்கும் மேற்பட்ட கார்களை திரும்ப அழைக்கும் பிரச்சாரத்தை விரிவுபடுத்தியுள்ளது. இதற்கு காரணம், ஃப்யூல் பம்பில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடு ஆகும். இந்த சிக்கல் இன்ஜின்னை நிறுத்தவோ, தொடங்கவோ தடையுண்டாக்கலாம்.
திரும்ப அழைக்கப்படும் மாடல்களில் அமேஸ், பிரியோ, பிஆர்-வி, WR-V, சிட்டி, ஜாஸ், அக்கோர்ட், சிவிக் ஆகியவையும் அடங்குகின்றன. இந்த கார்கள் 2017 ஆகஸ்ட் 8 முதல் 2018 ஜூன் 30 வரை தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சாரத்தின் கீழ், கார்கள் இலவசமாக பராமரிக்கப்படும், மேலும் குறைபாடுள்ள பாகங்கள் மாற்றப்படுகின்றன. நவம்பர் 5, 2024 முதல் இந்த மாற்றம் இந்தியா முழுவதும் நடைமுறையில் இருக்கும், மேலும் உரிமையாளர்கள் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளப்படுவார்கள்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்