- சைல்ட் பாதுகாப்பிற்காக பூஜ்ஜிய நட்சத்திரங்களைப் பெற்றுள்ளது
- அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஹோண்டா அமேஸ் க்ளோபல் என்கேப் க்ராஷ்-டெஸ்ட் செய்யப்பட்டது மற்றும் காம்பேக்ட் செடான் 2 ஸ்டார் சேஃப்டி ரேட்டிங்கை பெற்றுள்ளது. கிராஷ்-டெஸ்ட் அறிக்கையின்படி, அமேஸ்க்கு சைல்ட் பாதுகாப்பில் ஜீரோ ஸ்டாரும் அடல்ட் சேஃப்டிக்கு இரண்டு ஸ்டாரும் கிடைத்துள்ளன.
அடல்ட் சேஃப்டியில், அமேஸ் 34 புள்ளிகளில் 27.85 புள்ளிகளைப் பெற்றுள்ளார். பாடி ஷெல் நிலையாக இருப்பது கண்டறியப்பட்டாலும், டிரைவர் மற்றும் பயணிகளுக்கு முழங்கால் பாதுகாப்பு சுமாராக இருந்தது. இது தவிர, ஃப்ரண்ட் பயணிகள் இருவரின் கழுத்து மற்றும் தலைக்கு நல்ல பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சைல்ட் சேஃப்டி பற்றி பேசுகையில், இதில் 8.58 புள்ளிகளைப் பெற்றுள்ளது, இதில் இந்த காருக்கு இரண்டு ஐசோஃபிக்ஸ் பாயிண்ட்ஸ் வழங்கப்படுகின்றன, இது ரியர் சென்டரில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் சிஆர்எஸ் இன்ஸ்டாலேஷன் சரியாக வேலை செய்யவில்லை.
சோதனை செய்யப்பட்ட மாடலில் டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், சீட்பெல்ட் ப்ரீ-டென்ஷனர்ஸ் மற்றும் லோட்-லிமிட்டர் ஆகியவை இருந்தன. இது அனைத்து சீட்ஸும் ஐசோஃபிக்ஸ் ஆங்கரேஜ் மற்றும் சீட்பெல்ட் ரிமைன்டரைப் பெறுகிறது.
க்ளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட் குறித்து ஹோண்டா இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டது, 'தென்னாப்பிரிக்க-ஸ்பெக் செகண்ட் ஜெனரேஷன் அமேஸ் 2019 ஆம் ஆண்டில் க்ளோபல் என்கேபில் சோதிக்கப்பட்டது, அதில் ஏற்கனவே ஃபோர் ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. 'இருப்பினும், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் சைட் கர்ட்டன் ஏர்பேக்குகள் போன்ற கட்டாய உபகரணங்கள் இல்லாதது அதன் சேஃப்டி ரேட்டிங் குறைந்த காரணம் என தெரிவித்தனர்.'
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்