- புதிய சோனெட்க்கான முன்பதிவு டிசம்பர் 20, 2023 முதல் தொடங்குகிறது
- 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லான்ச் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கியா இந்தியா டிசம்பர் 14, 2023 அன்று நாட்டில் சோனெட் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தியது. இந்த காம்பாக்ட் எஸ்யுவியின் ஸ்டைலில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கார் உற்பத்தியாளர் அதன் வெளியீட்டு காலவரிசை பற்றிய தகவலை இன்னும் வழங்கவில்லை, ஆனால் அதன் விலை 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படலாம்.
புதிய ஃபேஸ்லிஃப்ட் சோனெட்டை டிசம்பர் 20 முதல் புக் செய்யலாம். இருப்பினும், இந்த எஸ்யுவியை முதலில் எவ்வாறு பெறுவது என்பதை இந்த கட்டுரையில் நாங்கள் உங்களுக்கு கூறுவோம். செல்டோஸைப் போலவே, சோனெட் வாங்குபவர்களும் கே-கோடின் நன்மைகளைப் பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் மற்றவர்களுக்கு முன்பாக சோனெட் டெலிவரி எடுத்து கொள்ளலாம். இதைச் செய்ய, உங்கள் அருகிலுள்ள கியா கார் உற்பத்தியாளரைத் தொடர்புகொண்டு அவர்களிடமிருந்து கே-கோடை உருவாக்க வேண்டும். மைகியா ஆப் மூலம், டிசம்பர் 20, 2023க்குள் கே-கோடை உருவாக்குவதன் மூலம் உங்கள் சோனெட்டை முன்பதிவு செய்யலாம்.
புதிய கியா சோனெட்டை HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-Line ஆகிய ஏழு வேரியன்ட்ஸ் வாங்கலாம். க்ளேசியர் ஒயிட் பேர்ல், ஸ்பார்க்லிங் சில்வர், க்ராவிட்டி க்ரே, அரோரா பிளாக் பேர்ல், இன்டென்ஸ் ரெட், இம்பீரியல் ப்ளூ, கிளியர் ஒயிட், பியூட்டர் ஆலிவ் மற்றும் மேட் கிராஃபைட் நிறத்தில் அடங்கும். மறுபுறம், டூயல் டோனில் பிளாக் ரூஃபுடன் கூடிய இன்டென்ஸ் ரெட் மற்றும் க்ளேசியர் ஒயிட் பேர்ல் உள்ளிட்ட 11 வண்ணங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்