ஹைப்ரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகத்துடன், டீசல் இன்ஜின்ஸ் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் தூய்மையான இயக்கத்தை மேம்படுத்துவதற்காக 2027 ஆம் ஆண்டிற்குள் டீசல் வாகனங்களை தடை செய்ய ஒரு அரசாங்க குழு முன்மொழிந்தது. இந்த பத்தாண்டுகளின் இறுதிக்குள் நகர்ப்புறங்களில் டீசல் நகரப் பேருந்துகள் இருக்கக் கூடாது என்றும் அந்த ரிப்போர்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிக்கையை அரசு இன்னும் ஏற்கவில்லை.
குழுவின் பரிந்துரைகள் எதிர்காலத்திற்கு ஏற்றவை என்று மினிஸ்ட்ரி தெரிவித்துள்ளது.அத்தகைய தடைகளை அமல்படுத்தலாமா என்பது குறித்து இறுதி அழைப்பை எடுக்க அனைத்து பங்குதாரர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் நிறைய ஆலோசனை தேவை என்றும் அது கூறியது.
தற்போது, டீசலில் இயங்கும் வாகனங்கள் இந்தியாவில் விற்பனையில் 40 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. இதில் கமர்ஷியல் மற்றும் பிரைவேட் வாகனங்களும் அடங்கும். போக்குவரத்துத் துறை கிட்டத்தட்ட 80 சதவிகிதம் டீசலைச் சார்ந்திருக்கிறது. இது போன்ற தடைக்கு மாற்று ஃபியூல் விருப்பங்களை வழங்க சரியான திட்டமிடல் தேவைப்படும். எனவே, “இடீஏசி பரிந்துரைகள் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று அமைச்சர் கூறினார்.
டீசல் வாகனங்களின் நன்மை தீமைகள்:
நன்மைகள்:
டீசல் இன்ஜின்ஸ் சி.ஐ (கம்ப்ரெஷன் இக்னிஷன்) இன்ஜின்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இன்ஜின் ஒரு ஸ்பார்க் இக்னிஷன்னுடன் ஒப்பிடும்போது அதிக கம்ப்ரெஷன் விகிதத்தைப் பயன்படுத்துகிறது, இதன் விளைவாக அதிக டோர்க்கை உருவாக்குகிறது. கமர்ஷியல் வாகனங்கள் டீசல் இன்ஜின்ஸைப் பயன்படுத்துவதற்கான ஒரே காரணம் கூடுதல் டோர்க். இது தவிர, டீசல் இன்ஜின்ஸ் மற்ற ஃபாஸ்ஸில் ஃபியூல் இன்ஜின்ஸுடன் ஒப்பிடும்போது குறைந்த இயங்கும் செலவு மற்றும் பராமரிப்புள்ளது.
தீமைகள்:
சி.ஐ இன்ஜினின் மிகப்பெரிய தீமை- புகை. வாயுக்களால் வெளியிடப்படும் துகள்களில் கார்சினோஜென்ஸ், நைட்ரஸ் ஆக்சைட்ஸ் மற்றும் சூட் ஆகியவை உள்ளன. இந்த எமிஷன்ஸ் சுற்றுச்சூழலை மோசமாக பாதிக்கின்றன மற்றும் காற்று மற்றும் ஒலி மாசு இரண்டிற்கும் பங்களிக்கின்றன. வாயுக்கள் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் ஆபத்தானவை, ஏனெனில் அவை சுவாச நோய்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன மற்றும் இறுதியில் க்ளைமேட் சேஞ்ச் மற்றும் க்ளோபல் வார்மிங்க்கு வழிவகுக்கும்.
யாருக்கு லாபம் மற்றும் யாருக்கு நஷ்டம்?
காலநிலைக் கண்ணோட்டத்தில், டீசல் இன்ஜின்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டால், அதன் விளைவாக அட்மோஸ்பியரில் கார்பன் தடம் பெருமளவு குறையும். இது தவிர, எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களை உற்பத்தி செய்பவர்கள் பயனடைவார்கள். டீசல் கார்ஸிலிருந்து ஹைப்ரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்ஸ்க்கு மாறுவது இந்த வாகனங்களில் பேட்டரிஸ்க்கான தேவையை அதிகரிக்கும்.
நாம் நேர்மறைகளைக் காணும் அதே வேளையில், நாம் பெரும் இழப்புகளைச் சந்திக்க நேரிடும். பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையங்கள் ஊழியர்களை கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைக்கலாம். மேலும், இது போக்குவரத்தில் ஈடுபடும் தொழில்முனைவோரின் வாழ்க்கையில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். இது ஒரு கிலோமீட்டருக்கு இயங்கும் செலவை மறைமுகமாக பாதிக்கும், இதன் விளைவாக பொருட்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தின் விலை உயரும் .
டீசல் இன்ஜின்ஸ் பற்றிய சுருக்கமான அறிமுகம்:
டீசலில் இயங்கும் வாகனங்கள் 1930 களின் முற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டன. 260D மாதிரியின் தொடர் உற்பத்தி 1935 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கியது, மேலும் உலகின் முதல் வழக்கமான உற்பத்தி டீசல் கார் பிப்ரவரி 1936 இல் வெளிவந்தது. டீசல் வாகனங்கள் அதிக டோர்க் மற்றும் அதிக ஃபியூல் எஃபிஷியன்சி காரணமாக கமர்ஷியல் பயன்பாடுகள் மற்றும் பொது போக்குவரத்திற்கு முதன்மையாக பயன்படுத்தப்பட்டன.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்