- மஹிந்திரா தார் ஆர்டபிள்யூடிக்கு போட்டி கொடுக்கலாம்
- புதிய 4x2 கூர்கா 3-டோர் பாணியில் உள்ளது
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்காவின் புதிய வேரியன்ட்டை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இந்த வேரியன்ட் 2024 கூர்கா எஸ்யுவியின் ரியர்-வீல் டிரைவ் (RWD) வெர்ஷனாக இருக்கும். புதிய கூர்கா 4x2 இன் இந்த பிரத்யேக மாடல் 3-டோர் பாடி ஸ்டைலில் கிடைக்கும்.
ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, கூர்கா 4x2 மற்றும் 4x4 போன்ற 2.6 லிட்டர் ஃபோர் சிலிண்டர் டீசல் இன்ஜினைக் கொண்டிருக்கும், இது 138bhp பவரையும், 320Nm பீக் டோர்க்கையும் உருவாக்கும்.
இருப்பினும், இந்த மாடலின் பாடியில் பெரிய மாற்றங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை, ஏனெனில் இது முந்தைய மாடலைப் போலவே நான்கு சீட் கொண்ட கேபின் அமைப்பையும் கொண்டிருக்கலாம். நிறுவனம் 4x4 க்கு பதிலாக 4x2 ஹார்ட்வேயர்ரை பயன்படுத்துவதால், இந்த காரின் விலையும் குறையலாம்.
இதன் ஆரம்ப விலை ரூ. 16.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஃபோர்ஸ் மாடல் மஹிந்திரா தார் ஆர்டபிள்யூடியுடன் நேரடியாகப் போட்டியிடப் போகிறது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்