- விலைகள் விரைவில் அறிவிக்கப்படும்
- 3 டோர் வெர்ஷனிலும் சில அப்டேட் செய்யப்பட்டன
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் இந்தியாவில் தனது 5 டோர் கூர்காவை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, வரவிருக்கும் வாரங்களில் இதன் விலைகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், ஃபோர்ஸ்நிறுவனம் எஸ்யுவியின் 3 டோர் வெர்ஷனையும் புதுப்பித்துள்ளது.
டிசைனில், புதிய கூர்கா 5-டோரின் ஃப்ரண்ட்டில் கூர்கா எழுத்துகள், ஃபெண்டரில் பொருத்தப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்ஸ், இன்டெக்ரேட்டட்டிஆர்எல்ஸ் கொண்ட வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப்ஸ், ஃபாக் லைட்ஸ், ஸ்நோர்கெல், ரூஃப் ரேக், சங்கி வீல் ஆர்ச்ஸ் மற்றும் பிளாக்-அவுட் டோர் ஹேண்டல்ஸ் உள்ளன. கூடுதலாக, இதில் செங்குத்தாக அடுக்கப்பட்ட டெயில்லைட்ஸ், 18-இன்ச் அலோய் வீல்ஸ், இன்டெக்ரேட்டட்லேடர், டெயில்கேட்டில் பொருத்தப்பட்ட ஸ்பேர் வீல் மற்றும் டோ ஹூக் ஆகியவற்றைப் பெறுகிறது.
இன்டீரியரில், புதிய 2024 கூர்காவில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோகொண்ட 9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட்சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட்டல் க்ளஸ்டர், டில்ட் அண்ட் டெலஸ்கோபிக்அட்ஜஸ்டெபிள் ஸ்டியரிங், டூயல் ஏர்பேக்ஸ், இபிடி உடன் ஏபிஎஸ், டீபிஎம்எஸ் மற்ற்ம் ஷிஃப்ட் ஆன் ஃப்ளை 4X4 சிஸ்டமும் உள்ளது.
ஃபோர்ஸ் கூர்கா 2.6-லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜினுடன் 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 138bhp மற்றும் 320Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. 3-டோர் மற்றும் 5-டோர் வெர்ஷனில் முறையே நான்கு மற்றும் ஏழு இருக்கை திறன் கொண்டவை. மாருதி ஜிம்னி மற்றும் மஹிந்திரா தார் போன்றவற்றுடன் போட்டியிடும் கூர்கா 5-டோர் 233 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்