- 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லான்ச் செய்யபடலாம்
- த்ரீ-டோர் தார் போன்ற அதே இன்ஜின்ஸில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஃபைவ்-டோர் மஹிந்திரா தார் இந்த ஆண்டு ஆகஸ்ட் நடுப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் அறிமுகத்திற்கு முன்னதாகவே டெஸ்டிங்கில் காணப்பட்டது. ஷார்ட் வீல்பேஸ் த்ரீ-டோர் மஹிந்திரா தார் 15 ஆகஸ்ட் 2020 அன்று உலகிற்கு தெரியப்படுத்தப்பட்டு சரியாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தார் வெர்ஷன் வரும்.
2021 இல் மஹிந்திரா ஃபைவ்-டோர் மஹிந்திரா தார் அறிவித்ததில் இருந்து நாம் அதிகம் பேசி வருவதை ஸ்பை படங்கள் உறுதிப்படுத்துகின்றன. இது ஸ்டைலிங் அடிப்படையில் அதே வடிவமைப்பைப் பெறும், ஆனால் வீல்ஸ்க்கான புதிய வடிவமைப்பு மற்றும் கூடுதல் நீளம் இதில் பெறலாம். வரலாற்று ரீதியாக நீண்ட மஹிந்திரா மாடல்ஸ் 4.3 மீட்டர் முதல் 4.4 மீட்டர் வரை நீளம் கொண்டவை, மேலும் இந்த ஃபைவ்-டோர் எல்டபிள்யூபி தார் இந்த வரிசையில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மஹிந்திரா இந்த வரிசையில் முன்னோக்கி சென்றால், இந்த காரை அர்மடா என்று அழைப்பது ஒரு நல்ல வரலாற்று மறுமலர்ச்சியாக இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.
ஃபைவ்-டோர் மஹிந்திரா தார் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
மஹிந்திரா அதன் 2.0-லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0-லிட்டர் டீசலை ஃபைவ் டோர் தாரிலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம். இந்த டீசல் 130bhp/300Nm உற்பத்தி செய்யும் அதேசமயம் பெட்ரோல் 150bhp/320Nm உற்பத்தி செய்கிறது மற்றும் இதில் சிக்ஸ் ஸ்பீட் எம்டீ/ஏடீ உடன் பெறலாம். பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் 4WD வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட வீல்பேஸ் தார்க்கு மஹிந்திரா ஆர்டபிள்யூடி பேக்கேஜை வழங்குவது சாத்தியமில்லை.
ஃபைவ்-டோர் மஹிந்திரா தார் விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா இந்த காரின் விலை ரூ.14 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இது ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஆஸ்டர், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஹெக்டர், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற மாடல்ஸ்க்கு போட்டியாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்