மாருதி சுஸுகி இன்விக்டோவை நேற்று ரூ.24.79 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் டொயோட்டாவின் இனோவா ஹைகிராஸை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் இரண்டிற்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. இந்த இரண்டு வாகனங்களின் வண்ண விருப்பங்கள், விலை மற்றும் அம்சங்களை இந்தக் கட்டுரையில் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
டொயோட்டா இனோவா ஹைகிராஸ் அதிக வண்ண விருப்பங்களை பெறுகிறது
மாருதி இன்விக்டோ நான்கு வண்ண விருப்பங்களில் வெளியிடப்பட்டுள்ளது, டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஏழு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. இந்த வண்ணங்களை பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி இன்விக்டோ | டொயோட்டா இனோவா ஹைகிராஸ் |
நெக்ஸா ப்ளூ | பிளாகிஷ் ஏஜெஹா கிலாஸ் ஃபிளேக் |
மிஸ்டிக் ஒயிட் | ஸ்பார்க்லிங் பிளாக் பேர்ல க்ரிஸ்டல் ஷைன் |
மெஜஸ்டிக் சில்வர் | அட்டிட்யூட் பிளாக் மைக்கா |
ஸ்டெல்லர் ப்ரௌன் | சில்வர் மெட்டாலிக் |
- | எவண்ட் கார்டு ப்ரான்ஜ் மெட்டாலிக் |
- | பிளாட்டினம் ஒயிட் பேர்ல் |
- | சூப்பர் ஒயிட் |
எது விலை குறைந்தது?
மாருதி இன்விக்டோ மற்றும் ஹைகிராஸின் எக்ஸ்-ஷோரூம் விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி இன்விக்டோ | டொயோட்டா இனோவா ஹைகிராஸ் |
ஜெட்டா ப்ளஸ் 7 சீட்டர் – ரூ.24.79 லட்சம் | VX ஹைப்ரிட் 7 சீட்டர் – ரூ. 25.03 லட்சம் |
ஜெட்டா ப்ளஸ் 8 சீட்டர் – ரூ.24.84 லட்சம் | VX ஹைப்ரிட் 8 சீட்டர் – ரூ.25.08 லட்சம் |
ஆல்ஃபா ப்ளஸ் 7 சீட்டர் – ரூ.28.42 லட்சம் | ZX ஹைப்ரிட் 7 சீட்டர்– ரூ.29.35 லட்சம் |
மாருதி இன்விக்டோவில் கிடைக்கும் ஃபீச்சர்ஸ்
அம்சங்களிலும் இரண்டு வாகனங்களுக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. மாருதி இன்விக்டோவில் எடாஸ், இரண்டாவது வரிசையில் ஒட்டோமான் ஃபங்ஷன் கொண்ட கேப்டன் சீட்ஸ் மற்றும் 17-இன்ச் அலோய் வீல்ஸ் இவை எல்லாம் இனோவா ஹைகிராஸில் இல்லை என்று தெரிவிக்கிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்