- ஆறு வேரியண்ட்ஸில் வழங்கப்படும்
- மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்ஸில் கிடைக்கும்
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் லான்ச்க்கு முன்னதாகவே, அதன் வேரியண்ட்ஸின் பெயர் வெளியிடப்பட்டது. டாடா மோட்டார்ஸ் அதன் தற்போதைய மாடல்ஸின் (XE, XM …) வேரியண்ட்ஸ் பெயரிடுவதில் இருந்து விலகிச் செல்லும். இந்த எஸ்யுவி வேரியண்ட்க்கு பிராண்ட் வேற பெயரைக் கொடுக்கப் போகிறது. புதிய வேரியண்ட்ஸின் பெயர் பற்றிய முழு விவரங்களைப் பெற முழுமையாக இதை படிக்கவும்.
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டில் எந்த புதிய வேரியண்ட்ஸ் சேர்க்கப்படும்?
வரவிருக்கும் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் ஸ்மார்ட், ஸ்மார்ட் ப்ளஸ், ப்யூர் ப்ளஸ், கிரியேட்டிவ் ப்ளஸ், ஃபியர்லெஸ் மற்றும் ஃபியர்லெஸ் ப்ளஸ் வேரியண்ட்ஸில் வழங்கப்படும். இவற்றில், பஞ்ச் மாடலின் ப்யூர் மற்றும் கிரியேட்டிவ் வேரியண்ட்ஸின் பெயர்களை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். ஸ்மார்ட் மற்றும் ஃபியர்லெஸ் ட்ரிம்ஸ் புதியவை, இது முதல் முறையாக டாடா மாடலின் வேரியண்ட் வரிசையில் புதிதாக சேர்க்கப்படும்.
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டில் என்ன புதிய அம்சங்கள் உள்ளன?
புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டில் புதிய ஸ்ப்ளிட் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் பெரிய 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றைப் பெறும். கேபினில் புதிய கியர் லெவர் மற்றும் ஹாப்டிக் அடிப்படையிலான ஏர்கான் பேனல்ஸை ரிடிசைன் செய்யப்பட்ட சென்டர் கன்சோலையும் பெறும்.
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் லான்ச் மற்றும் போட்டியாளர்கள்
டாடா மோட்டார்ஸ் தனது நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டை செப்டம்பர் மாத மத்தியில் அறிமுகப்படுத்த உள்ளது. இது மஹிந்திரா XUV300, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ரேனோ கைகர் மற்றும் நிசான் மேக்னைட் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்