- பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ஏடாஸ் சூட் மற்றும் பலவற்றைப் பெறும்
- பிஎன்கேப் மற்றும் ஜிஎன்கேப் டெஸ்ட் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன
டாடா மோட்டார்ஸ் அதன் நியூ-ஏஜ் கூபே எஸ்யுவியான கர்வ் ஐ ஐசிஇ மற்றும் இவி ஆகிய இரு வேரியன்ட்ஸிலும் அறிமுகப்படுத்த உள்ளது. இவி வேரியன்ட் ஆகஸ்ட் 7 ஆம் தேதி சந்தைக்கு வரவிருக்கும் நிலையில், ஐசிஇ வேரியன்ட் விரைவில் வெளியிடப்படும். இப்போது, பெட்ரோல் கர்வ்வின் படங்களை நாங்கள் வெளிப்படுத்திய பிறகு, வரவிருக்கும் டாடா கர்வ் இவி’யின் உறுதிப்படுத்தப்பட்ட அம்சப் பட்டியலின் பிரத்யேக விவரங்கள் எங்களிடம் உள்ளன.
டாஷ்போர்டில் தொடங்கி, நெக்ஸான், சஃபாரி மற்றும் ஹேரியர் போன்ற லே அவுட் ஐ பெறும் கர்வ் இவி ஆனது. அம்சங்களைப் பொறுத்தவரை, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்ட், 12-இன்ச் ஹர்மன் கார்டன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், ஆர்கேட்.இவி மற்றும் 15+ ஓடிடி ஆப்ஸ் மற்றும் ஒன்பது ஜெபிஎல் ஸ்பீக்கர் இருக்கும். மேலும் இதில் வென்டிலேடெட் மற்றும் பவர்ட் ஃப்ரண்ட் சீட், லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் மூட் லைட்டிங்குடன் கூடிய பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைப் பெறும்.
பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உபகரணங்களைப் பொறுத்தவரை, கர்வ் இவி ஆனது ஆறு ஏர்பேக்குகள், ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஆட்டோ ஹோல்ட் ஃபங்ஷன் கொண்ட எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், நான்கு டிஸ்க் பிரேக்குகள், ஐஆர்ஏ 2.0 கனெக்டெட் டெக்னாலஜி மற்றும் டிரைவர் ட்றோசினஸ் டிடெக்ஷன் கொண்ட நிலை 2 ஏடாஸ், டாடா கர்வ் இவி ஏற்கனவே ஜிஎன்கேப்மற்றும் பிஎன்கேப்க்ராஷ் டெஸ்ட்களுக்கு உட்பட்டுள்ளது மற்றும் இது அடல்ட் மற்றும் சைல்ட் சேஃப்டியில் ஐந்து ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
டாடா கர்வின் விலை ரூ. 18 லட்சம் முதல் ரூ. 24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ரேஞ்சில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்டவுடன், டாடாவின் முதல் ஃபுல்-எலக்ட்ரிக் கூபே எஸ்யுவி ஆனது எம்ஜி ZS இவி, மஹிந்திரா XUV400, பிஒய்டி அட்டோ 3 மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா இவி ஆகியவற்றுக்கு எதிராக போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்