- கர்வ் இவி விலை ஆகஸ்ட் 7 அன்று இந்தியாவில் அறிவிக்கப்படும்
- ஐசிஇ வெர்ஷனுடன் லான்ச் ஆகும்
டாடா மோட்டார்ஸ் கர்வ் ரேஞ்சின் விலையை ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளிப்படுத்தும், மேலும் அதன் லான்ச்க்கு முன்னதாக, இந்த மாடல் நாடு முழுவதும் உள்ள டீலர்களை சென்றடையத் தொடங்கியுள்ளது. அதற்கான பிரத்யேக படங்கள் எங்களிடம் உள்ளன.
படங்களில், புதிய கர்வ் இவி வர்ச்சுவல் சன்ரைஸ் நிறத்தில் காணப்படுகிறது. அதன் எக்ஸ்டீரியரில் ஃப்ளஷ்-ஃபிட்டிங்க் டோர் ஹேண்டல்ஸ், க்ளோஸி பிளாக் கிளாடிங், ஸ்பிளிட் ஹெட்லைட்ஸ், எல்இடி லைட் பார்ஸ், சார்ஜிங் போர்ட், டூயல்-டோன் அலோய் வீல்ஸ், ஸ்லோப்பிங்க் ரூஃப்லைன் மற்றும் எல்இடி டெயில்லைட்ஸ் ஆகியவை உள்ளன.
இந்த படங்களில், 2024 கர்வ் இவி’யின் இன்டீரியர் தெளிவாக தெரிகின்றன. இதில் ஃபாக்ஸ் கார்பன்-ஃபைபர் ஃபினிஷ் கொண்ட டேஷ்போர்டு, ஃபோர்-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், 12.3-இன்ச் டச்ஸ்கிரீன், ஏசி பட்டன்களுக்கான டச் கன்ட்ரோல்ஸ் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை அடங்கும். இது நெக்ஸானிலிருந்து எடுத்த சென்டர் கன்சோல், டிரைவ் மோட் செலக்டர், பார்சல் ட்ரே, டூயல்-டோன் தீம், புதிய கீ, பவர்ட் டெயில்கேட், எலக்ட்ரிகள்ளி சரிசெய்யக்கூடிய டிரைவர் சீட், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் ஆகியவற்றைப் பெறுகிறது.
கர்வ் இவி இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களுடன் வரும். 55kWh பேட்டரி சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டார் இருக்கும். டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம், இந்த பேட்டரி 10 நிமிடங்களில் 100 கிமீ ரேஞ்சை கொடுக்க முடியும். முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிமீ தூரம் வரை செல்லும் என கூறப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்