- இது 11 வேரியண்ட்ஸ் மற்றும் ஆறு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- நெக்ஸான் இவி உடன் அறிமுகப்படுத்தப்படும்
டாடா தனது சிறந்த விற்பனையான மாடலான நெக்ஸானின் புதிய எடிஷனை நாளை அதாவது செப்டம்பர் 14 ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்படுவதற்கு முன்பே, இந்த சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவியின் வெயிட்டிங் பீரியட் பற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது.
இந்த அப்டேடட் நெக்ஸானின் ஐசிஇ மற்றும் இவி இரண்டு வேரியண்ட்டுமே இப்போது டீலர்ஷிப்ஸை வந்து அடையத் தொடங்கியுள்ளன. எங்கள் ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, தற்போதைய மாடலின் முன்பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் அல்லது இரண்டு மாதங்கள் வெயிட்டிங் பீரியட்டில் உள்ளது. இந்த காத்திருப்பு காலம் நெக்ஸான் மற்றும் நெக்ஸான் இவி இரண்டிற்கும் ஆகும்.
புதிய நெக்ஸானில் கிடைக்கும் அம்சங்கள்
2023 நெக்ஸான் ஆனது ஸ்மார்ட், ஸ்மார்ட்+, ஸ்மார்ட்+ S, ப்யூர், ப்யூர் S, கிரியேட்டிவ், கிரியேட்டிவ்+, கிரியேட்டிவ்+ S, ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ்+ மற்றும் ஃபியர்லெஸ்+ S ஆகிய 11 வேரியண்ட்ஸில் வழங்கப்படும். அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான பில்ட்-இன் நேவிகேஷன் ஆதரவுடன் கூடிய டிஜிட்டல் டிஸ்ப்ளே, புதிய டச்-அடிப்படையிலான எச்விஏசி கண்ட்ரோல், இல்லுமினேட்டட் டாடா லோகோவுடன் கூடிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதில் 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஆம்பியன்ட் லைட்டிங், புதிய கியர் லெவர், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்ஸ், ரெயின்-சென்சிங் வைப்பர்ஸ் மற்றும் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸுடன் வழங்கப்படும்.
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்
தற்போதைய மாடலில் உள்ள அதே இன்ஜின் தான் இதுளையும் உள்ளன. இந்த எஸ்யுவியின் பெட்ரோல் இன்ஜினுடன் செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸுடன் கிடைக்கும்.
இன்ஜின் | டிரான்ஸ்மிஷன் |
1.2-லிட்டர்டர்போ-பெட்ரோல் இன்ஜின் | ஃபைவ்-ஸ்பீட் மேனுவல்,சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், ஏஎம்டீ, செவன்-ஸ்பீட் டிசிடீ யூனிட் |
1.5-லிட்டர் டீசல் இன்ஜின் | சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட் |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்