- மற்ற பிளாக்ஸ்டோர்ம் வெர்ஷனின்க்கு ஏற்ப புதுப்பிப்புகளைப் பெறுகிறது
- ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் இந்த வார இறுதியில் லான்சாகும்
எம்ஜி மோட்டார் இந்தியா சமீபத்தில் தனது சமூக ஊடக சேனல்களில் ஒரு டீஸரை ஷேர் செய்தது. ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் வெர்ஷன் என்று அழைக்கப்படும் இந்த வெர்ஷனின் விவரங்கள் இப்போது எங்களிடம் கிடைத்துள்ளன.
ஆஸ்டர் மற்றும் குளோஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் வெர்ஷனைப் போலவே, எம்ஜி ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் வெர்ஷனும் பிரத்தியேகமாக பிளாக் பெயிண்ட் தீமில் கிடைக்கும். டார்க் குரோம் கிரில், பியானோ பிளாக் ரூஃப் ரெயில்ஸ் மற்றும் ஹெட்லேம்ப் பெசல்ஸ், ஸ்மோக்டு டெயில்லைட்ஸ், ரெட் ப்ரேக் காலிப்பர்களுடன் கூடிய பிளாக் அலோய் வீல்ஸ் மற்றும் ஃப்ரண்ட் ஃபெண்டரில் ‘பிளாக்ஸ்டோர்ம்’ லோகோவும் கிடைக்கும். மேலும், ஃப்ரண்ட் பம்பர் மற்றும் ஓஆர்விஎம்களில் ரெட் அக்ஸ்ன்ட்ஸ் உள்ளன, மேலும் இது சைடு மற்றும் ரியர் ப்ரோஃபைல் வரை நீட்டிக்கப்படலாம்.
உள்ளே, புதிய ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் வெர்ஷன் ரெட் ஆம்பியன்ட் லைட்டிங், ரெட் அக்ஸ்ன்ட்ஸ், பிளாக் இன்டீரியர் தீம் மற்றும் ரெட் இன்சர்ட்ஸுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஜின் விருப்பங்களில் எந்த மாற்றமும் இருக்காது, இதனால் வாடிக்கையாளர்கள் இதை 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்களிலிருந்து தேர்வு செய்யலாம். இந்த வெர்ஷன் ஹெக்டர் ப்ளஸ் ரேஞ்சில் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்படலாம். லான்ச்க்கு பிறகு, இது கியா செல்டோஸ் X-லைன், ஹூண்டாய் க்ரெட்டா N-லைன் மற்றும் டாடா ஹேரியர் டார்க் எடிஷனுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்