- ஃப்ரோன்க்ஸின் புதிய வேரியன்ட் விலை ரூ. 8.93 லட்சத்தில் இருந்து ஆரம்பம்
- கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன
மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸின் இரண்டு புதிய வேரியன்ட்ஸ்ஸை ரூ. 8.93 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வேரியன்ட்ஸ் டெல்டா ப்ளஸ் வேரியன்ட்டிற்கு மேலே அமைந்துள்ளன, இதில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்கிறது.
மாருதி ஃப்ரோன்க்ஸ் டெல்டா ப்ளஸ் வேரியன்ட்டுடன் ஒப்பிடுகையில், டெல்டா ப்ளஸ் (O) வேரியன்ட்டில் சைட் மற்றும் கர்ட்டன் ஏர்பேக்குகள் உள்ளன. கூடுதலாக, ஸ்பேர் வீல் அகற்றப்பட்டு, ஸ்டாண்டர்ட் டயர் பழுதுபார்க்கும் கருவியுடன் மாற்றப்பட்டுள்ளது. ஃப்ரோன்க்ஸ் டெல்டா ப்ளஸ் (O) இன் விலை டெல்டா ப்ளஸ் வேரியன்ட்டை விட ரூ. 15,500 அதிகம்.
ஃப்ரோன்க்ஸ் ஆனது சிக்மா, டெல்டா, டெல்டா ப்ளஸ், டெல்டா ப்ளஸ் (O), ஜெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய ஆறு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். வாடிக்கையாளர்கள் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் அல்லது சிஎன்ஜி கிட் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகியவற்றிலிருந்து தேர்வு செய்யலாம்.
ஃப்ரோன்க்ஸ் டெல்டா ப்ளஸ் வேரியன்ட்ஸின் (எக்ஸ்-ஷோரூம்) விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
வேரியன்ட்ஸ் | விலை |
ஃப்ரோன்க்ஸ் டெல்டா ப்ளஸ் (O) எம்டீ | ரூ. 8.93 லட்சம் |
ஃப்ரோன்க்ஸ் டெல்டா ப்ளஸ் (O) ஏஜிஎஸ் | ரூ. 9.43 லட்சம் |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்