- ஏப்ரல் 29, 2024 அன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்படும்
- இது பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஏடாஸ் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டிருக்கும்
ஒருபுறம், மஹிந்திரா XUV 3XO இன் அதிகாரப்பூர்வ வெளியீடு ஏப்ரல் 29, 2024 அன்று வழங்கப்படும் என்று நாங்கள் காத்திருக்கிறோம். மறுபுறம், நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களும் டாடா நெக்ஸான் போட்டியாளரான XUV 3XO க்கான முன்பதிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளன, நீங்கள் 21,000 ரூபாய்க்கு டோக்கன் தொகை செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
புதுப்பிக்கப்பட்ட XUV300 இப்போது XUV 3XO என பெயரிடப்பட்டுள்ளது, இது அதன் இன்டீரியர் எக்ஸ்டீரியரிலும் பல புதிய மாற்றங்களைக் காணும். அதன் எக்ஸ்டீரியரில் மாற்றங்கள் பற்றி பேசுகையில், இந்த எஸ்யுவியின் டைமேன்ஷனில் எந்த மாற்றமும் இல்லை, அதே நேரத்தில் அதன் டிசைனில் மாற்றங்கள் இருக்கும். இது ஒரு நேர்த்தியான கிரில், தலைகீழான சி-வடிவ எல்இடி டிஆர்எல்கள், டூயல்-பேரல் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் ஒரு கவர்ச்சியான பம்பருடன் புதிய முன் தோற்றத்தைக் கொண்டிருக்கும். ரியரில், எல்இடி டெயில்லைட்கள் புதிதாக வடிவமைக்கப்பட்ட பம்பருடன் இணைக்கப்படும் மற்றும் டெயில்கேட் ட்வின்-பீக் மஹிந்திரா லோகோவுடன் XUV 3XO பிராண்டிங்கைப் பெறும். இது தவிர, எஸ்யுவி புதிதாக வடிவமைக்கப்பட்ட அலோய் வீல்ஸும் பெறும்.
என்பதை நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம் இது தவிர, வென்டிலேடெட் சீட்ஸ், பவர்ட் டிரைவர் சீட், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் புதிய சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
மாடல் அதிக வண்ண விருப்பங்களுடன் புதிய வேரியன்ட்ஸும் பெறும் என்று நம்புகிறோம். அறிமுகப்படுத்தப்படும் போது, XUV 3XO அதன் பிரிவில் கியா சோனெட், டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா, ரெனோ கைகர், நிசான் மேக்னைட் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் போன்றவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்