- செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் 7 வேரியண்ட்ஸில் வழங்கப்படும்
- GTX ப்ளஸ் மற்றும் X லைன் வேரியண்ட்ஸ்க்கு கூடுதல் வெயிட்டிங் பீரியட்
கியா ஜூலை 21 ஆம் தேதி ஆன்று செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் ரூ.10.90 லட்சம் என்ற ஆரம்ப விலையில் லான்ச் செய்தன. இது HTE, HTK, HTK ப்ளஸ், HTX, HTX ப்ளஸ், GTX ப்ளஸ் மற்றும் X லைன் போன்ற ஏழு வேரியண்ட்ஸில் கிடைக்கின்றன. விலை அறிவிப்புக்கு பின், இந்தியாவில் உள்ள வாடிக்கையாளருக்கு டெலிவரியை தொடங்கியது. இதில் உங்களுக்கு கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் எல்லா வேரியண்ட்ஸின் வெயிட்டிங் பீரியட்டை கட்டியுள்ளோம்.
2023 செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட் வாரியான வெயிட்டிங் பீரியட்
குறைந்த வெயிட்டிங் பீரியட் பற்றி பேசுகையில், இதன் என்ட்ரி லெவலில் இருக்கும் HTE, HTK, HTK ப்ளஸ் மற்றும் HTXக்கு 4-5 வாரங்கள் வரை வெயிட்டிங் பீரியடில் வழங்கபடும். GTX ப்ளஸ் மற்றும் X லைன் வேரியண்ட்ஸ்க்கு 8-9 வாரங்கள் வரை வெயிட்டிங் பீரியடில் கிடைக்கும். டீசல் வேரியண்ட்ஸான GTX ப்ளஸ் மற்றும் X லைன் வேரியண்ட்ஸ்க்கு 14-15 வாரங்கள் வரை வாடிக்கையாளர் காத்திருக்க வேண்டும்.
வேரியண்ட்ஸ் | வெயிட்டிங் பீரியட் |
HTE | 4-5 வாரங்கள் / 8-9 வாரங்கள் (டீசல்) |
HTK | 4-5 வாரங்கள் / 8-9 வாரங்கள் (டீசல்) |
HTK ப்ளஸ் | 4-5 வாரங்கள் / 8-9 வாரங்கள் (டீசல்) |
HTX | 4-5 வாரங்கள் / 8-9 வாரங்கள் (பெட்ரோல் சிவிடீ) / 8-9வாரங்கள் (டீசல்) |
HTX ப்ளஸ் | 8-9 வாரங்கள் |
GTX ப்ளஸ் | 14-15 வாரங்கள் |
X லைன் | 14-15 வாரங்கள் |
கியா செல்டோஸ் இன்ஜின் விவரங்கள்
செல்டோஸ் 1.5-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரெடெட் பெட்ரோல், 1.5-லிட்டர் டீசல் மற்றும் புதிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் போன்ற மூன்று இன்ஜின் விருபங்களில் வழங்கப்படும். 1.5-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரெடெட் பெட்ரோல் 113bhp/144Nm டோர்க்கை ஜென்ரேட் செய்யும், டர்போ பெட்ரோல் இன்ஜின் 158bhp/250Nm டோர்க்கை உருவாக்கும். அதே சமயம் 1.5-லிட்டர் டீசல் இன்ஜினில் 114bhp/250Nm டோர்க்கை ஜென்ரேட் செய்யும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை இதில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், சிவிடீ, ஐஎம்டீ, டோர்க் கன்வர்டர் மற்றும் டிசிடீ யூனிடுடன் கிடைக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்