- ஆறு டீசல் மேனுவல் வேரியன்ட்ஸில் கிடைக்கும்
- அதன் ஐஎம்டீ வேரியன்ட்ஸ் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
நாங்கள் முன்னாடியே அறிவித்தபடி, நாட்டில் கேரன்ஸ் எம்பீவியின் டீசல் மேனுவல் வேரியன்ட்ஸில் கியா இந்தியா வேலை செய்து வருகிறது. தற்போது அதன் வேரியன்ட்ஸ் மற்றும் டீசல் மேனுவல் வேரியன்ட்ஸின் விலைகள் பற்றிய தகவல்கள் எங்களிடம் உள்ளன.
கியா கேரன்ஸ் இப்போது ப்ரீமியம், ப்ரீமியம் (O), பிரஸ்டீஜ், பிரஸ்டீஜ் ப்ளஸ், லக்சுரி மற்றும் லக்சுரி ப்ளஸ் உள்ளிட்ட ஆறு புதிய டீசல் டிரிம்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியன்ட்ஸும் ஸ்டாண்டர்டாக ஏழு சீட்டர் கொண்ட உள்ளமைவை பெறுகின்றன, அதே சமயம் பிந்தையது அதாவது லக்சுரி ப்ளஸ் ஆறு சீட்டர் கொண்ட தளவமைப்புடன் இருக்கலாம். கூடுதலாக, இந்த புதிய அப்டேட் மூலம் காரின் டீசலின் ஐஎம்டீ அல்லது க்ளட்ச்லெஸ் மேனுவல் வேரியன்ட்ஸ்ஸை நிறுத்துவதற்கு கார் தயாரிப்பாளர் தயாராகிவிட்டார். ஐஎம்டீ வெர்ஷன்னை விட மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுக்கான தேவை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
கியா கேரன்ஸ் டீசல் வேரியன்ட்ஸ் வாரியான விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டீசல் வேரியன்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலை (6எம்டீ) | எக்ஸ்-ஷோரூம் விலை (6ஐஎம்டீ) | இரண்டின் விலையில் உள்ள வேறுபாடு |
ப்ரீமியம் | ரூ. 12.67 லட்சம் | ரூ. 12.65 லட்சம் | ரூ. 2,000 |
ப்ரீமியம் (O) | ரூ. 12.90 லட்சம் | - | புதியது |
பிரஸ்டீஜ் | ரூ. 14 லட்சம் | ரூ. 13.95 லட்சம் | ரூ. 5,000 |
பிரஸ்டீஜ் ப்ளஸ் | ரூ. 15.47 லட்சம் | ரூ. 15.45 லட்சம் | ரூ. 2,000 |
லக்சுரி | ரூ. 17.15 லட்சம் | ரூ. 16.95 லட்சம் | ரூ. 20,000 |
லக்சுரி ப்ளஸ் | ரூ. 18.15 லட்சம் | ரூ. 18.15 லட்சம் | - |
மேலே பார்த்தபடி, கார் இப்போது புதிய ப்ரீமியம் (O) டீசல் வேரியன்டைப் பெறுகிறது. மேனுவல் மற்றும் ஐஎம்டீ டிரிம்களுக்கு இடையேயான விலை வேறுபாட்டைப் பொறுத்தவரை, ப்ரீமியம் மற்றும் பிரஸ்டீஜ் ப்ளஸ் வேரியன்ட்ஸ்க்கு இடையே ரூ. 2,000 வித்தியாசம் உள்ளது. இதற்கிடையில், பிரஸ்டீஜ் மற்றும் லக்சுரி வேரியன்ட்டின் விலை முறையே ரூ. 5,000 மற்றும் ரூ. 20,000.
கேரன்ஸ் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்டர் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டீசல் இன்ஜின் 113bhp பவரையும், 250Nm டோர்க் திறனையும் உருவாக்குகிறது. இருப்பினும், இந்த எம்பீவி இரண்டு என்ஏ பெட்ரோல் இன்ஜின்களிலும் கிடைக்கிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்