- இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களில் கிடைக்கிறது
- இந்தியாவில் இதன் விலை 11 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
ஹூண்டாய் இந்தியா தனது பிரபலமான எஸ்யுவி க்ரெட்டாவின் விலையை இன்று முதல் உயர்த்த திட்டம்மிட்டுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் சமீபத்தில் ரூ. 11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கியா, டொயோட்டா மற்றும் ஹோண்டா போன்ற பிராண்டுகளும் இந்த மாதத்திலிருந்து தங்கள் கார்களின் விலையை அதிகரித்துள்ளன என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் பெட்ரோல் ரேஞ்சைப் பற்றி பேசுகையில், அதன் E 1.5 பெட்ரோல் MT, SX(O) 1.5 டர்போ டிசிடீ மற்றும் SX(O) 1.5 டர்போ டிசிடீ டூயல்-டோன் வேரியன்ட்ஸின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. மீதமுள்ள அனைத்து வேரியன்ட்ஸின் விலைகளும் சமமாக ரூ. 3,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
டீசல் வரிசையில், ஹூண்டாய் SX(O) 1.5 ஏடீ மற்றும் SX(O) 1.5 ஏடீ டூயல்-டோன் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்ஸின் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை, மீதமுள்ள அனைத்து வேரியன்ட்ஸிலும் ரூ. 10,800 வரை விலை உயர்ந்துள்ளது.
ஹூண்டாய் க்ரெட்டா மூன்று இன்ஜின்கள் மற்றும் ஐந்து டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் கிடைக்கிறது. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் இதை ஏழு வண்ண விருப்பங்களுடன் ஏழு வேரியன்ட்ஸிலிருந்து தேர்வு செய்யலாம். மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகியவற்றுடன் க்ரெட்டா போட்டியிடுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்