- தற்போது, மாருதி எர்டிகா, ஏழு மாதம் வெயிட்டிங்கில் உள்ளது
- சிஎன்ஜி வேரியண்ட்ஸ்க்கு அதிக தேவை
மாருதி சுஸுகி அதன் பிரபலமான மாடல்ஸ் ஆன எர்டிகா, பிரெஸ்ஸா, ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகியவற்றிற்கான காத்திருப்பு காலத்தை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஏழு-சீட்டர் கொண்ட எம்பீவி, எர்டிகாவிற்கான காத்திருப்பு காலம் கடந்த சில மாதங்களில் இருந்ததை விட கிட்டத்தட்ட பாதி குறைந்துள்ளது என்று கார் தயாரிப்பாளர் வெளிப்படுத்தினார்.
எர்டிகா ரேஞ்சின், சிஎன்ஜி வெர்ஷன்ஸ் மிக உயர்ந்த காத்திருப்பு காலத்தைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது, இது சமீபத்தில் வரை ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்தது. மாருதியின் கூற்றுப்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் குறைக்கடத்திகள் மற்றும் சில சிஎன்ஜி தொடர்பான கூறுகளின் பற்றாக்குறை நீண்ட காத்திருப்பு காலத்தை விளைவித்தது.
மேற்கூறிய உதிரிபாகங்களின் சப்ளை அதிகரிப்பு, மாடலின் உற்பத்தியின் அதிகரிப்புடன், காத்திருப்பு காலத்தை முந்தைய காலவரிசையான ஒரு வருடத்திலிருந்து சுமார் ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை குறைத்துள்ளது. மேலும், மாடல்ஸ் முழுவதும் சிஎன்ஜி வெர்ஷன்க்கான நீண்ட காத்திருப்பு காலத்தை நிவர்த்தி செய்தாலும், தயாரிப்புகள் முழுவதும் ஒட்டுமொத்த காத்திருப்பு காலத்தை குறைக்க படலாம் என்று மாருதி மேலும் கூறினார்.
குறிப்பிடத்தக்க வகையில், மாருதி எர்டிகா பிராண்டின்படி கிட்டத்தட்ட 1 லட்சம் முன்பதிவுகளை குவித்துள்ளது, மேலும் எம்பீவி மட்டும் 93,000 யூனிட் ஆர்டர்ஸ் நிலுவையில் இருப்பதாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாங்கள் தெரிவித்தோம்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்