- 5 ஜூலை, 2023 அன்று அதன் உலகளாவிய அறிமுகமாகும்
- நெக்ஸா அவுட்லெட்ஸின் வழியாக விற்கப்படும்
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி, அதன் வரவிருக்கும் எம்பீவி 'இன்விக்டோ' என்று அழைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி எம்பீவி உலகளவில் அறிமுகமாகும் என்றும் கார் தயாரிப்பாளர் வெளிப்படுத்தினார். இது டொயோட்டா இனோவா ஹைகிராஸ் அடிப்படையிலானது மற்றும் நாட்டில் உள்ள நெக்ஸா அவுட்லெட்ஸின் வழியாக விற்பனை செய்யப்படும்.
மாருதி இன்விக்டோ எக்ஸ்டீரியர்:
இன்விக்டோ, இனோவா ஹைகிராஸ் போன்ற டிசைனை பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், முன் பக்க கிரில்லில் உள்ள டொயோட்டா லோகோ இரண்டு தயாரிப்புகளையும் வேறுபடுத்துவதற்காக பிராண்டின் லோகோவால் மாற்றப்படும். இணையத்தில் வெளிவந்த ஸ்பை படங்களின்படி, புதிய மாருதி எம்பீவி ஹெக்ஸகன் மெஷ் பேட்டர்னுடன் டூ-ஸ்லாட் குரோம் கிரில் உடன் அறிமுகமாக வாய்ப்புள்ளது. லோவர்-பம்பர்-மவுண்டட் எல்இடி டிஆர்எல்ஸ் மற்றும் அகலமான ஏர் டேம்ஸ் கொண்ட டொயோட்டாவை போன்ற முன்பகுதி ஒரே மாதிரியாக இருக்கும்.
மாருதி இன்விக்டோவின் இன்டீரியர்:
உள்ளே, உற்பத்தியாளரிடமிருந்து சில சிறிய மாற்றங்களை எதிர்பார்க்கிறோம். அதே டாஷ்போர்டு லேஅவுட் மற்றும் வயர்லெஸ் மொபைல் கனெக்டிவிட்டி கூடிய உயரமான, ஃப்ரீ-ஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனுடன் இது வர வாய்ப்புள்ளது. இந்த மாருதி எம்பீவி ஆனது பனோரமிக் சன்ரூஃப், இரண்டாவது வரிசையில் இயங்கும் ஒட்டோமான் கேப்டன் சீட்ஸ், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்ஸ் கொண்ட 360 டிகிரி கேமரா ஆகியவற்றையும் பெறலாம்.
மாருதி இன்விக்டோவின் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்:
முன்னதாக என்கேஜ் எம்பீவி என அறியப்பட்ட மாருதி இன்விக்டோ, இனோவா ஹைகிராஸ் கார்ஸில் உள்ள அதே பவர்ட்ரெயினைக் கொண்டிருக்கும். இது 172bhp மற்றும் 188nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்ட 2.0 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின் மூலம் இயக்கப்படும். இந்த மில் இ-சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்படும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்