- இந்தியாவில் ஆரம்ப விலை ரூ. 6.73 லட்சம்
- ஏழு வண்ணங்கள் மற்றும் நான்கு வேரியண்ட்ஸில் கிடைக்கும்
இந்த ஆண்டு அக்டோபரில் மாருதி தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார்ஸ் பெரும் தள்ளுபடியில் கிடைக்கிக்குறது. இந்த நன்மைகள் கேஷ் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் வடிவில் பெறலாம், மேலும் இந்த சலுகைகள் அனைத்து நெக்ஸா மற்றும் அரீனா டீலர்ஷிப்ஸில் பொருந்தும்.
இந்த கட்டுரையில் மாருதி சுஸுகி செலிரியோவின் ஆஃப்பரைப் பற்றி தான் பேச போகிறோம், இதன் VXi, ZXi, மற்றும் ZXi பெட்ரோல் எம்டீ வேரியண்ட்ஸ்க்கு ரூ. 35,000 கேஷ் தள்ளுபடியில், எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ. 20,000 மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 4,000 இல் பெறலாம். மறுபுறம் நீங்கள் ஏஎம்டீ வேரியண்ட்ஸை வாங்க விரும்பினால் கேஷ் தள்ளுபடி ரூ. 30,000, எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ. 20,000 மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.4,000 இல் அடங்கும். சிஎன்ஜியில் இயங்கும் செலிரியோவை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ. 30,000 கேஷ் தள்ளுபடி மற்றும் ரூ. 20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படும்.
செலிரியோ LXi, VXi, ZXi மற்றும் ZXi+ ஆகிய நான்கு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மேலும் ஏழு வண்ணங்களில் இருந்து தேர்வு செய்யலாம். இந்த மாடலில் 1.0 லிட்டர், த்ரீ-சிலிண்டர், என்ஏபெட்ரோல் இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் மற்றும் ஏஎம்டீ யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் வெர்ஷன் 66bhp மற்றும் 89Nm, சிஎன்ஜி வெர்ஷன் 56bhp மற்றும் 82Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்