- இது நான்கு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது
- இதில் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது
மாருதி சுஸுகி இக்னிஸ் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. ஜனவரி மாதத்தில் இந்த ஹூண்டாய் எக்ஸ்டர் போட்டியாளர் காருக்கு கார் தயாரிப்பு நிறுவனம் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த நன்மைகள் கேஷ் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வடிவில் கிடைக்கின்றன மேலும் இந்த தள்ளுபடிகள் MY2023 மற்றும் MY2024 ஆகிய இரண்டு மாடல்களிலும் வழங்கப்படுகின்றன.
இக்னிஸின் 2023 மாடலில் ரூ. 55,000 வரை தள்ளுபடி பெறுகிறது. இதில் ரூ. 40,000 வரை கேஷ் தள்ளுபடி மற்றும் ரூ. 15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் அடங்கும். அதுவே, 2024 மாடலில் ரூ. 40,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, இதில் ரூ. 25,000 வரை கேஷ் தள்ளுபடியும் ரூ. 15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸும் வழங்கப்படுகின்றன.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சலுகைகளும் ஜனவரி 31, 2024 வரை செல்லுபடியாகும் மற்றும் இது ஸ்டாக், டீலர்ஷிப், வேரியன்ட், நிறம், கியர்பாக்ஸ் விருப்பம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மாறுபடலாம். இந்தச் சலுகையைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு உங்களுக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலரைத் தொடர்புகொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.
மாருதி சுஸுகி இக்னிஸ் 1.2 லிட்டர் BS6 ஃபேஸ் 2 கம்ப்ளைன்ட் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது, இது 82bhp மற்றும் 113Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இந்த இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் அல்லது ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் வழங்கபடுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்