- ரூ. 3.50 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ்-மேபேக் GLS 600 மாடல்
- இதுமட்டுமின்றி அவரிடம் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ், ஆடி Q5, வேகன் ஆர் போன்ற கார்களும் உள்ளது
இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே ரூ. 3.50 கோடி (ஆன்ரோடு விலை) மதிப்புள்ள மெர்சிடிஸ்-மேபேக் GLS 600 சொகுசு காரை 21-02-2024 அன்று வாங்கினார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டாப்ஸி பண்ணு, ரகுல் ப்ரீத் சிங், ரன்வீர் சிங், கிருத்தி சனோன் மற்றும் அர்ஜுன் கபூர் ஆகியோர் இதை வைத்துருக்காங்க, தற்போது அவர்களுடன் அஜிங்க்யா ரஹானேவும் இணைந்துள்ளார். வாருங்கள் ரஹானேவின் புதிய மெர்சிடிஸ்-மேபேக் GLS 600 இன் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை இதில் பார்போம்.
மெர்சிடிஸ்-மேபேக் GLS 600 அம்சங்கள்
ரஹானே வாங்கிய ஜிஎல்எஸ் மேபேக் 600 மாடலைப் பார்த்தால், ப்ரீமியம் மெட்டீரியல்களுடன் கூடிய சொகுசு கேபின் உள்ளது. இது டூயல் 12.3-இன்ச் கனெக்டெட் ஸ்கிரீன்கள், ஒரு பனோரமிக் சன்ரூஃப், பல்வேறு செயல்பாடுகளை கட்டுப்படுத்த ரியர் ஆர்ம்ரெஸ்டில் 7-இன்ச் எம்-பக்ஸ் செட்டப், ஃப்ரண்ட் மற்றும் ரியரில் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரியரில் எலக்ட்ரிக் சன்பிளைண்ட்கள் மற்றும் 64-வண்ண ஆம்பியன்ட் லைட்டிங் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
மெர்சிடிஸ்-மேபேக் GLS 600 இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்
இந்த எஸ்யுவி 4.0 லிட்டர் பை-டர்போ V8 பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இந்த இன்ஜின் 550bhp/730Nm டோர்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும் இதில் எலக்ட்ரிக் மோட்டாரில் 21bhp மற்றும் 250Nm டோர்க்கை வழங்குகிறது. டிரான்ஸ்மிஷனில் இதில் 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் கையாளப்படுகிறது.