-டாடா ஹேரியர் மற்றும் சஃபாரி தற்போது டீசல் பவருடன் மட்டுமே வழங்கப்படுகிறது
-எதிர்காலத்தில் 1.5 லிட்டர் ஜிடிஐ டர்போ பெட்ரோலில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
டாடாவின் மிக விலையுயர்ந்த சிஎன்ஜி வாகனமாக நெக்ஸான் இருக்குமா?
டாடா தனது சிஎன்ஜி திட்டங்களுடன் பெரிய அளவில் முன்னேறி வருகிறது, தற்போது டியாகோ, டிகோர், அல்ட்ரோஸ் மற்றும் இந்த ஆண்டின் இறுதியில் பஞ்ச் உடன் பெட்ரோல் மாற்றீட்டை வழங்குகிறது. இந்த பட்டியலில் எதிர்பார்க்கப்படும் மற்றொரு வாகனம் நெக்ஸான் ஆகும், இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு சிஎன்ஜி மாடலை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா தற்போது அதன் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரெடெட் பெட்ரோலுடன் சிஎன்ஜியை மட்டுமே வழங்குகிறது, அதே நேரத்தில் நெக்ஸான் டர்போசார்ஜ்ட் 1.2 லிட்டர் பெட்ரோலைப் பயன்படுத்துகிறது என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.
ஹேரியர் மற்றும் சஃபாரி’க்கு சிஎன்ஜி இல்லை?
டாடாவின் ரேஞ்சில் நெக்ஸான் மிகவும் விலையுயர்ந்த சிஎன்ஜி காராக இருக்கும் என்ற இந்த அறிவிப்பு, டாடாவின் 4.00-மீட்டர் ப்ளஸ் மாடல்ஸான ஹேரியர், சஃபாரி மற்றும் வரவிருக்கும் கர்வ் ஆகியவை முறையே டூயல் மற்றும் சிங்கிள் ஃபியூல் விருப்பங்களுடன் இருக்கும் என்பதைக் குறிக்கிறது. ஹேரியர் மற்றும் சஃபாரி இரண்டும் தற்போது 168bhp/350Nm உற்பத்தி செய்யும் 2.0-லிட்டர் டீசலைப் பயன்படுத்துகின்றன, மேலும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் உடன் வழங்கப்படுகின்றது. இந்த இன்ஜின் BS62 E20 விதிமுறைகளை சந்திக்க ஒருமுறை மேம்படுத்தப்பட்டது ஆனால் BS7 காலத்திற்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கலாம்.
இந்த இரண்டு கார்ஸும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்டப்பட்ட டாடாவின் 1.5 லிட்டர் டீஜிடிஐ இன்ஜினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 168bhp/280Nm உற்பத்தி செய்கிறது, ஃப்ளெக்ஸ்-ஃபியூல் இணக்கமானது மற்றும் எம்டீ மற்றும் ஏடீ விருப்பங்களுடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போட்டியாக ஐசிஇ-இயங்கும் டாடா கர்வ் ஆகியவை 122bhp/225Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் 1.2 லிட்டர் டீஜிடிஐ இன்ஜினைப் பயன்படுத்தும். இந்த இன்ஜின் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக எம்டீ மற்றும் ஏடீ ஆகிய இரண்டு விருப்பங்களையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ரீமியம் செக்மென்ட்டில் சிஎன்ஜி
மாருதி கிராண்ட் விட்டாரா, மாருதி சுஸுகி XL6 மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய மூன்று கார்ஸ் மட்டுமே சிஎன்ஜியை வழங்கும் ப்ரீமியம் செக்மென்ட்டில் உள்ளன, அனைத்து வாகனங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
டாடா ஹேரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் ஸ்பைட் டெஸ்டிங்
டாடா ஹேரியர் மற்றும் சஃபாரியின் பெரிதும் மேம்படுத்தப்பட்ட பதிப்புகள் கடந்த சில மாதங்களாக சோதனை செய்வதை பார்க்கப்பட்டு வருகின்றன, மேலும் அவை 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய கார் மார்க்கெட்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்