இந்தியாவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கருத்தில் கொண்டு, சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்களின் தேவை இந்த நாட்களில் அதிகரித்துள்ளது. டாடா, ஹூண்டாய் மற்றும் மாருதி சுஸுகி போன்ற உற்பத்தியாளர்கள் டிசம்பர் 2023 இல் தங்கள் சிஎன்ஜி மாடல்ஸில் பெரும் தள்ளுபடியை வழங்குகிறார்கள். இந்த கட்டுரையில், இந்தியாவில் விற்கப்படும் சிஎன்ஜி கார்களுக்கான கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு இறுதி தள்ளுபடிகள் பற்றி நாங்கள் உங்களுக்கு இதில் சொல்லப் போகிறோம்.
டாடா டியாகோ சிஎன்ஜி மற்றும் டிகோர் சிஎன்ஜி
டாடா டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி ஆகியவை ட்வின்-சிலிண்டர் சிஎன்ஜி டெக்னாலஜி அடிப்படையாகக் கொண்டது, இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை முறையே ரூ. 6.55 லட்சம் மற்றும் ரூ. 7.80 லட்சம். கார் தயாரிப்பாளர்கள் டியாகோ சிஎன்ஜியில் ரூ. 50,000 வரையிலும், டிகோர் சிஎன்ஜியில் ரூ. 55,000 வரையிலும் தள்ளுபடியை வழங்குகிறார்கள். இதில் ரூ. 15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 5,000 வரையிலான கார்ப்பரேட் போனஸ் ஆகியவை அடங்கும். டிகோர் சிஎன்ஜியில் ரூ. 35,000 வரை கன்சுமர் போனஸ் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் டியாகோ சிஎன்ஜி வாங்க நினைத்தால், அவர்களுக்கு ரூ. 30,000 வரை கேஷ் தள்ளுபடி கிடைக்கும்.
டொயோட்டா க்ளான்ஸா சிஎன்ஜி
மாருதி சுஸுகி பலேனோ அடிப்படையிலான ஹேட்ச்பேக் டொயோட்டா க்ளான்ஸா தற்போது சிஎன்ஜியில் ரூ. 51,000 வரை தள்ளுபடி பெறுகிறது. இந்த நன்மைகள் ரூ. 20,000 வரை கேஷ் தள்ளுபடி, ரூ. 20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 11,000 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த ப்ரீமியம் சிஎன்ஜி ஹேட்ச்பேக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 8.60 லட்சம் ஆகும்.
மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி
மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி டெல்டா மற்றும் ஜெட்டா ஆகிய இரண்டு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது, இதன் ஆரம்ப விலை ரூ. 8.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். சலுகைகளைப் பற்றி பேசுகையில், இந்த ஆண்டின் இறுதியில் பலேனோ சிஎன்ஜியில் ரூ. 37,000 வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 25,000 வரை கேஷ் தள்ளுபடி, ரூ. 10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 2,000 கார்ப்பரேட் போனஸ் ஆகியவை அடங்கும்.
மாருதி செலிரியோ, எஸ்-பிரஸ்ஸோ, வேகன்-ஆர் மற்றும் ஸ்விஃப்ட் ஆகியவை சிஎன்ஜி விருப்பத்தில் கிடைக்கும் மற்ற மாடல்கள். கார் உற்பத்தியாளர்கள் இந்த மாடல்களுக்கும் பெரும் தள்ளுபடியை வழங்குகிறார்கள்.
மாடல்கள் | கேஷ் தள்ளுபடி | எக்ஸ்சேஞ்ச் போனஸ் | மொத்த தள்ளுபடி |
செலிரியோ | ரூ. 30,000 | ரூ. 20,000 | ரூ. 50,000 |
எஸ்-பிரஸ்ஸோ | ரூ. 30,000 | ரூ. 20,000 | ரூ. 50,000 |
வேகன்-ஆர் | ரூ. 25,000 | ரூ. 20,000 | ரூ. 45,000 |
ஸ்விஃப்ட் | ரூ. 25,000 | - | ரூ. 25,000 |
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் சிஎன்ஜி மற்றும் ஆரா சிஎன்ஜி
ஹூண்டாய் இந்தியா டிசம்பர் 2023 இல் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா மீது ரூ. 48,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. கிராண்ட் i10 நியோஸ் ஹேட்ச்பேக் ரூ. 35,000 வரை கேஷ் தள்ளுபடி, ரூ. 10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 3,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. மறுபுறம், ஆரா சிஎன்ஜியில் ரூ. 20,000 வரை கேஷ் தள்ளுபடி, ரூ. 10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 3,000 வரை கார்ப்பரேட் போனஸ் வழங்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்