- சிட்ரோன் தற்போது இந்தியாவில் 58 டீலர்ஷிப்களைக் கொண்டுள்ளது
- விரைவில் 140க்கும் மேற்பட்ட புதிய இடங்களில் திறக்க ஏற்பாடுகள்
சிட்ரோன் இந்த ஆண்டு இறுதிக்குள் 200 விற்பனை மற்றும் சேவை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது, இதற்காக நிறுவனம் நெட்வொர்க் விரிவாக்க திட்டத்தை (NEP) அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 140க்கும் மேற்பட்ட இடங்களில் பிராண்ட் தனது சேவைகளை வழங்க முடியும்.
தற்போது, சிட்ரோன் 58 டீலர்ஷிப்களைக் கொண்டுள்ளது, அதை 200 ஆக அதிகரிக்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த டச்பாயிண்ட்கள், டீயர் 1 டீயர் 2 நகரங்களில் மட்டுமல்லாமால் டீயர் 3 மற்றும் டீயர் 4 கிராமப்புற சந்தைகளிலும் திறக்கப்பட்டு, அதன் நெட்வொர்க்கை 400 சதவீதம் அதிகரிக்கும்.
இந்த மாத தொடக்கத்தில், சிட்ரோனின் புதிய திட்டங்களைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொன்னோம், இதில் இந்த ஆண்டு ஜூலையில் அதன் எல்லா கார்களையும் மேம்படுத்தும் பணியில் வேலை செய்து வருகிறது. கூடுதலாக, சி-க்யூப் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பிராண்டின் அடுத்த மாடல் C3X கூபே ஆகும், இது புதிய இன்டீரியரை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய சிட்ரோன் இந்தியாவின் பிராண்ட் இயக்குநர் ஷிஷிர் மிஷ்ரா, “சிட்ரோன்னை வாடிக்கையாளர்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாக மாற்றவும், எங்கள் தயாரிப்புகளை டீயர் 1 மற்றும் டீயர் 2 நகரங்கள் மற்றும் கிராமப்புற சந்தைகளுக்கு விரிவுபடுத்தவும் விரும்புகிறோம். இந்த சிறிய நகரங்களில் முதலீடு செய்வதன் மூலம், வளர்ந்து வரும் இந்தியாவின் வளர்ச்சியில் நாம் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்