- சிட்ரோன் நிறுவனம் தற்போது நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட ஷோரூம்களைக் கொண்டுள்ளது
- இந்த பிராண்ட் இந்தியாவில் 4 மாடல்களை விற்பனை செய்து வருகிறது
புதுச்சேரியில் புதிய ஷோரூமை திறந்து தென்னிந்தியாவில் சிட்ரோன் இந்தியா தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்தியுள்ளது. இந்த புதிய ஷோரூமை அறிமுகப்படுத்தியதன் மூலம், தற்போது இந்தியாவில் உள்ள 46 நகரங்களில் சுமார் 51 ஷோரூம்களைக் கொண்டுள்ளது.
புதிய கார் வாங்கும் அனுபவத்துடன், வாடிக்கையாளர்கள் சிட்ரோன் நிறுவனத்திடமிருந்து அஃப்டர் சேல் சேவை நன்மைகளையும் பெறலாம். சிட்ரோன் கார் உரிமையாளர்கள் வீட்டு வாசலில் பராமரிப்பு சேவைகள், வர்ச்சுவல் ரிமோட் கண்டறிதல், ஸ்பேர் பார்ட்ஸ், ஆர்எஸ்ஏ வசதி மற்றும் பிக் அப் அண்ட் டிராப் சேவைகள் போன்ற வசதிகளைப் பெறுவார்கள்.
தற்போது, பிரெஞ்சு வாகன உற்பத்தியாளர் இந்தியாவில் C3, eC3, C3 ஏர் கிராஸ் மற்றும் C5 ஏர் கிராஸ் உட்பட மொத்தம் 4 மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
லா மைசன் சிட்ரோன் புதுச்சேரி டீலர் பிரின்சிபால் பி.ஞானப்பிரகாசம் பேசுகையில், “புதுச்சேரிக்கு லா மைசன் சிட்ரோன் பிசிகல் ஷோரூம் அனுபவத்தை கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சிட்ரோன் தயாரிப்பு வரம்பு மற்றும் கார்கள் மீதான பேரார்வம் மற்றும் ஆர்வத்தின் குழுவுடன், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மீறும் அனுபவத்தை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். புதுச்சேரி மக்களுக்கு சிறந்த தொந்தரவில்லாத கார் வாங்கும் அனுபவத்தை வழங்கவும், அவர்களின் சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நல்ல அனுபவத்தை உருவாக்கவும் எங்கள் குழு உறுதியளிக்கிறது” என்று கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்