- குழந்தைகளின் சேஃப்டிக்கு 1 ஸ்டார் கிடைத்தது
- இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலிருந்து ஆறு ஏர்பேக்குகள் மற்றும் ஐசோஃபிக்ஸ் கிடைக்கும்
சிட்ரோன் இந்தியா சமீபத்தில் அதன் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் eC3 இன் சேஃப்டி டெஸ்ட் செய்யப்பட்டது மற்றும் அதன் ரிசல்ட் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. டெஸ்ட் செய்யப்பட்ட மாடலில் ஃப்ரண்ட் டிரைவர் மற்றும் பாசஞ்சர் ஏர்பேக்குகள், பெல்ட் லோட் லிமிட்டர் மற்றும் சீட் பெல்ட் ரிமைன்டர் அடங்கியது க்ளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் ஜீரோ சேஃப்டி ரேட்டிங்கைப் பெற்றது.
eC3 ஆனது அடல்ட் அக்யுபேண்ட் டெஸ்ட்டில் 34க்கு 20.86 புள்ளிகளையும், சைல்டு அக்யுபேண்ட் ப்ரொடெக்க்ஷன் டெஸ்ட்டில் 49க்கு 10.55 புள்ளிகளையும் பெற்றுள்ளது. க்ளோபல் என்கேப் படி, டிரைவர் மற்றும் பாசஞ்சரின் தலை மற்றும் கழுத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நன்றாக இருந்தது. இருப்பினும், சைடில் தலை பாதுகாப்பு இல்லாததால் இதில் சைட் போல் இம்பெக்ட் டெஸ்ட் செய்யப்படவில்லை. காரின் பாடிஷெல் நல்ல ஸ்ட்ராங்க்னு சொல்லலாம்.
இது தவிர, இந்த எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கில், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரியர் டோர் மேனுவல் சைல்டு லாக், ஹை-ஸ்பீட் அலர்ட் சிஸ்டம் மற்றும் ஸ்பீட் சென்சிடிவ் ஆட்டோ டோர் லாக் போன்ற பாதுகாப்பு அம்சங்களைப் பெறுகிறது. ஆறு ஏர்பேக்குகள், ஐசோஃபிக்ஸ் மற்றும் ரியர் சீட் பெல்ட் ரிமைன்டர் போன்ற பாதுகாப்பு அம்சங்களை அதன் அனைத்து கார்களுக்கும் அதிகரிப்பதாகவும், இவை 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து செயல்படுத்தப்படும் என்றும் ஒரு மாதத்திற்கு முன்பு நிறுவனம் அறிவித்தது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்