- விலை விரைவில் அறிவிக்கப்படும்
- C3 ஹேட்ச்பேக் சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனைப் பெறும்
சமீபத்திய பஸால்ட் மற்றும் C3 ஏர்கிராஸ் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ந்து டிரெண்டில் இருக்கும் நிலையில், அவற்றை நாம் மறந்துவிடுவதற்கு முன், சிட்ரோன் நிறுவனம் C3 ஹேட்ச்பேக்கை டூ-பெடல் விருப்பத்தைக் கொண்டு ஒரு பெரிய அப்டேட்டுடன் புதுப்பித்துள்ளது. மேலும், இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் என்று வரும்போது, சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் 109bhp/205Nm டோர்க்கையும், சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் 109bhp/190Nm டோர்க்கையும் உற்பத்தி செய்ய சிட்ரோன் எந்த வகையான இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸைக் கொண்டு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. பஸால்ட் காரில் மேனுவல் டிரான்ஸ்மிஷனுக்கும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுக்கும் உள்ள வித்தியாசம் ரூ. 1.4 லட்சம் மட்டுமே. அதேபோல, ஏர்கிராஸ்க்கு வரும்போது இவற்றுக்கு இடையேயான வித்தியாசம் ரூ. 1.3 லட்சம். மேலும், ஹேட்ச்பேக்கிற்கு, சுமார் ரூ. 1.2 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும், டர்போ பெட்ரோல் இன்ஜின் விருப்பம் டாப்-ஸ்பெக் ஷைன் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்.
பஸால்ட்டை வெளியிடும் போது, சிட்ரோன் மேம்படுத்தப்பட்ட C3 ஹேட்ச்பேக்கை வெளிப்படுத்தியது, இதில் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ-போல்டிங்க் கொண்ட பவர் மிர்ரர் மற்றும் 14-இன்ச் அலோய் வீல்ஸ் உள்ளன. இந்த காரின் அனைத்து வேரியன்ட்ஸ்க்கும் 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிடி, ஐசோஃபிக்ஸ் சைல்ட் சீட் மவுண்டிங் பாயிண்ட்கள் மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் (ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மட்டும்) போன்ற அம்சங்களைப் பெறுகின்றன.
இதில் வழங்கப்படும் பல்வேறு அப்கிரேடுகளுடன், ஒட்டுமொத்த C3 ஹேட்ச்பேக் மற்ற மாடல்களுடன் போட்டியாக உள்ளது. இதில் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ், ரெனோ கைகர் மற்றும் காம்பேக்ட் செடான்களான ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் ஆரா மற்றும் வரவிருக்கும் நெக்ஸ்ட் ஜென மாருதி டிசையர் ஆகியவை அடங்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்