- முதிர்ந்தவர்கள் பாதுகாப்பில் 12.21 பாயிண்ட்ஸை பெற்றது
- இந்தியாவில் இது டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்ஸ், இபிடி உடன் ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்ஸ் மற்றும் ஃப்ரண்ட் சீட்ஸ்க்கான சீட் பெல்ட் ரிமைன்டர்ஸுடன் கிடைக்கிறது
சிட்ரோன் C3 லத்தீன் என்கேப் கிராஷ் டெஸ்ட்க்கு உட்பட்டது மற்றும் கிராஷ் டெஸ்டில் பூஜ்ஜிய ஸ்டார்ஸைப் பெற்றது. இந்த டெஸ்ட் மியூலில் டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்ஸ், சீட்பெல்ட் லோட் லிமிட்டர், இஎஸ்சி மற்றும் சீட்பெல்ட் ரிமைன்டர் ஆகியவை பொருத்தப்பட்டிருந்தது.
முதிர்ந்தவர்கள் மற்றும் குழந்தைகளின் ப்ரொடெக்ஷன் ரேட்டிங்
முதிர்ந்தவர்கள்க்கான பாதுகாப்பைப் பொறுத்தவரை, C3 12.21 பாயிண்ட்ஸை பெற்றது. அதேசமயம், குழந்தைகளின் எண்ணிக்கையில், 5.93 பாயிண்ட்ஸை பெற்றது. முன்பக்க தாக்கத்தில், டிரைவர் மற்றும் பயணிகளின் தலைகள் நல்ல பாதுகாப்பைக் காட்டியது. டிரைவரின் முழங்கால்களும் பயணிகளின் வலது முழங்காலும் ஓரளவு பாதுகாப்பைக் காட்டியது. முன் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு இருந்தபோது மார்பு பலவீனமான பாதுகாப்பைக் காட்டியது. இதன் பாடிஷெல் நிலையற்றதாகவும், மேலும் ஏற்றங்களைத் தாங்கும் திறனற்றதாகவும் மதிப்பிடப்பட்டது.
C3 இன்ஜின் மற்றும் வேரியண்ட்ஸ்
இந்தியா-ஸ்பெக் சிட்ரோன் C3, 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரெடெட் மற்றும் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்ஸால் இயக்கப்படுகிறது. இதில் இரண்டு பவர்ட்ரெயின்ஸும் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிட்ரோன் C3 லைவ், ஃபீல் மற்றும் ஷைன் வேரியண்ட்ஸில் கிடைக்கும், இதன் விலை ரூ.6.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்