- C3 ஏடீ அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது
- பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இதில் கிடைக்கும்
சிட்ரோன் அதன் பிரபலமான C3 ஹேட்ச்பேக்கின் ஆட்டோமேட்டிக் பதிப்பை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஆட்டோமேட்டிக் வெர்ஷனை நீங்கள் இப்போது முன்பதிவு செய்யலாம், இருப்பினும் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. புதுப்பிக்கப்பட்ட இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 6.16 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
புதிய C3 ஏடீ ஆனது சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இந்த இன்ஜின் 109bhp பவரையும், 190Nm டோர்க் திறனையும் உருவாக்குகிறது. இது தவிர, சிட்ரோன் C3 ஆனது 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினையும் கொண்டுள்ளது, இது 81bhp பவர் மற்றும் 115Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் வருகிறது.
இது தவிர, ஆட்டோமேட்டிக் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் வசதிக்கு சிறப்பு கவனம் செலுத்தி, C3 இல் சிட்ரோயன் பல புதிய அம்சங்களையும் சேர்த்துள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், ஐசோஃபிக்ஸ் சைல்ட் சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் த்ரீ-பாயிண்ட் சீட் பெல்ட்ஸ் ஆகியவை அடங்கும். இது தவிர, இப்போது டோரில் பவர் விண்டோ சுவிட்சுகள், ஃப்ரண்ட் பயணிகளுக்கான கிராப் ஹேண்டில், ஆட்டோ-ஃபோல்டிங் ஓஆர்விஎம்ஸ், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏர் கண்டிஷனிங் போன்ற அம்சங்களுடன் வருகிறது.
Citroen C3 ஐ வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்க்கு சென்று அதை முன்பதிவு செய்யலாம். புதிய C3 ஏடீ குறிப்பாக ஆட்டோமேட்டிக் காரைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கானது. இந்த வேரியன்ட் டாடா பஞ்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற மாடல்களை வாங்குபவர்களையும் ஈர்க்கக்கூடும், ஏனெனில் இந்த கார்கள் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் வழங்கப்படுகின்றன, அதேசமயம் C3 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைக் கொண்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்