- சிறப்புக் கட்டணங்கள் ஏப்ரல் 30, 2024 வரை மட்டுமே
- ப்ளூ எடிஷன் காஸ்மெட்டிக் மேம்படுத்தல்கள் மற்றும் சிறந்த அம்சங்களுடன்
புதிய நிதியாண்டின் தொடக்கத்தில், மற்ற அனைத்து கார் நிறுவனங்களும் அந்தந்த கார்களின் விலையை அதிகரித்து வரும் நிலையில், சிட்ரோன் நிறுவனம் தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள C3 மற்றும் C3 ஏர்கிராஸ் கார்களின் விலையை குறைத்துள்ளது. சிட்ரோன் C3 இன் விலையில் ரூ. 17,000 குறைத்து, தற்போது இதன் விலை ரூ. 5.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), மற்றும் C3 ஏர்கிராஸின் விலையில் ரூ. 1 லட்சம் வரை குறைத்து, இப்போது ரூ. 8.99 லட்சத்தில் தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்). இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த சிறப்பு விலைகள் அந்தந்த மாடல்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்ஸில் மட்டுமே பொருந்தும் மற்றும் இந்த மாத இறுதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.
இதை தவிர, கார் தயாரிப்பாளர் C3 மற்றும் eC3 மாடல்களில் ப்ளூ எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் ஃபீல் மற்றும் ஷைன் வேரியன்ட்ஸில் வழங்கப்படுகின்றன மற்றும் புதிய காஸ்மோ ப்ளூ எக்ஸ்டீரியர் நிறத்துடன் கிடைக்கின்றன. இன்டீரியரைப் பொறுத்தவரை, இது புதிய ஏர் ப்யூரிஃபையர், சில் பிளேட்ஸ், இல்லுமினேட்டட் கப் ஹோல்டர்ஸ், கஸ்டமைஸ்ட் சீட் கவர்ஸ், நெக் ரெஸ்ட்கள் மற்றும் சீட் பெல்ட் குஷன்ஸுடன் வருகிறது
நிகழ்ச்சியில் பேசிய சிட்ரோன் இந்தியாவின் பிராண்ட் இயக்குநர் ஷிஷிர் மிஸ்ரா, “நாங்கள் படிப்படியாக வளர்ந்து வரும் எங்கள் தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுடன் இந்த ஏப்ரல் மாதத்தைக் கொண்டாட விரும்புகிறோம், மேலும் குறுகிய காலத்தில் நாட்டின் பிற பிராண்டுகளுடன் போட்டியிடுகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த டிரைவ் அனுபவத்தையும் மற்றும் திருப்தியையும் வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நெட்வொர்க் எக்ஸ்டென்ஷன் ப்ளான் (NEP) கீழ் 200 சேல்ஸ் மற்றும் சர்வீஸ் சென்டர் அமைக்கும் இலக்குடன் இந்தியாவில் எங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்துகிவோம் என்று கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்