- விரைவில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும்
- டர்போ-பெட்ரோல் இன்ஜினில் வழங்கப்படும்
சிட்ரோன் இந்தியா நிறுவனம் C3 ஏர்கிராஸை ஏப்ரல் 2023 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, இப்போது இந்த வேரியண்ட் பற்றிய தகவலைப் பெற்றுள்ளோம். C3 ஹேட்ச்பேக்கை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்பு இந்திய மார்க்கெட்டில் பிராண்டின் நான்காவது வாகனமாகும். இதன் முன்பதிவுகள் செப்டம்பரில் தொடங்கும் மற்றும் இது அக்டோபர் 2023 இல் டெலிவரி தொடங்கப்படும்.
C3 ஏர்கிராஸ் வேரியண்ட் மற்றும் அம்சங்கள் விவரங்கள்
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் அதன் ஹேட்ச்பேக்கை லைவ், ஃபீல் மற்றும் ஷைன் ஆகிய மூன்று வேரியண்ட்ஸில் வழங்கப்படும். அம்சங்களைப் பொறுத்தவரை, இது 10 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆறு ஸ்பீக்கர் சிஸ்டம், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ரியர் வைப்பர் மற்றும் வாஷர் மற்றும் டிஃபாக்கர் ஆகியவற்றைப் பெறும். இதனுடன், பின்புறத்தில் ரூஃப்-மவுண்டட் ஏர்கான் வென்ட்ஸ், மேனுவல் ஐஆர்விஎம், எலக்ட்ரிக்கல் அட்ஜஸ்ட்டெபல் ஓஆர்விஎம்’ஸ், டீபீஎம்எஸ் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்களைப் பெறும்.
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் வண்ண விருப்பங்கள்
C3 ஏர்கிராஸ் நான்கு மோனோடோன் மற்றும் ஆறு டூயல் டோன் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இது போலார் ஒயிட், ஸ்டீல் க்ரே, பிளாட்டினம் க்ரே மற்றும் காஸ்மோ ப்ளூ ஆகிய நான்கு வண்ணங்களில் வழங்கப்படும்.
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் இன்ஜின் விவரங்கள்
சிட்ரோனின் மிட்-சைஸ் எஸ்யுவி 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும். இந்த மோட்டார் 109bhp மற்றும் 190Nm டோர்க்கை உருவாக்கும். சிட்ரோன் C3 மேனுவல் கியர்பாக்ஸுடன் அறிமுகப்படுத்த உள்ளது, ஆனால் பிராண்ட் 2024 ஆம் ஆண்டிற்குள் ஒரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை அதில் சேர்க்கலாம்.
போட்டியாளர்கள் மற்றும் C3 ஏர்கிராஸின் விலை
C3 ஏர்கிராஸின் விலை ரூ.9.50 லட்சம் முதல் ரூ.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்டவுடன், இது கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்