- வரும் மாதங்களில் சிட்ரோன் C3 ஏர்கிராஸின் விலையை இந்தியாவில் அறிவிக்கப்படும்
- செப்டம்பர் முதல் புக்கிங் தொடங்கப்படும்
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் புக்கிங் மற்றும் டெலிவரி விவரங்கள்
சிட்ரோன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் C3 ஏர்கிராஸை இந்திய மார்க்கெட்க்கு வெளியிட்டது, அதன் வெளியீடு வரும் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிட்-சைஸ் எஸ்யுவியின் முன்பதிவு செப்டம்பரில் தொடங்கும், அதே நேரத்தில் டெலிவரி இந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கும்.
நியூ சிட்ரோன் C3 ஏர்கிராஸ் வண்ண விருபங்கள்
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் மொத்தம் 10 விருபங்களில் வழங்கப்படும், இதில் நான்கு மோனோ-டோன் மற்றும் ஆறு டூயல்-டோன் வண்ணங்களில் வழங்கப்படும்.
மோனோ டோனில், போலார் ஒயிட், ஸ்டீல் க்ரே, பிளாட்டினம் க்ரே, காஸ்மோ ப்ளூ போன்றவை பெறலாம். மறுபுறம், டூயல்-டோனில் பிளாட்டினம் க்ரே ரூஃப் உடன் போலார் ஒயிட், காஸ்மோ ப்ளூ ரூஃப் உடன் போலார் ஒயிட், போலார் ஒயிட் ரூஃப் உடன் ஸ்டீல் க்ரே, காஸ்மோ ப்ளூ ரூஃப் உடன் ஸ்டீல் க்ரே, போலார் ஒயிட் ரூஃப் உடன் பிளாட்டினம் க்ரே மற்றும் போலார் ஒயிட் ரூஃப் உடன் காஸ்மோ ப்ளூ நிறங்களில் நீங்கள் தேர்வு செய்யலாம்.
2023 சிட்ரோன் C3 ஏர்கிராஸ் இன்ஜின் விவரக்குறிப்புகள்
வரவிருக்கும் C3 ஏர்கிராஸ் 1.2-லிட்டர், ஃபோர்-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் இன்ஜின்னிலிருந்து 108bhp மற்றும் 190Nm டோர்க்கை உற்பத்தி செய்யும். சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட இந்த மாடல் லிட்டருக்கு 18.50 கி.மீ மைலேஜைத் தரும் என்று கூறப்படுகிறது. சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எலக்ட்ரிக் வேரியண்ட்டிலும் வேலை செய்து வருகிறது, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்