- மூன்று வேரியண்ட்ஸில் வழங்கபடுகின்றன
- ஒற்றை இன்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும்
ஏப்ரல் 2023 இல் வெளியிடப்பட்டது, சிட்ரோன் C3 ஏர்கிராஸ் செப்டம்பர் மாதத்தில் நாட்டில் விற்பனைக்கு வந்தது, இதன் விலை ரூ. 9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இது யூ, ப்ளஸ் மற்றும் மேக்ஸ் ஆகிய மூன்று வேரியண்ட்ஸில் ஐந்து மற்றும் ஏழு சீட்டர் ஆப்ஷனில் கிடைக்கிறது. இப்போது, ஆட்டோமேக்கர் இந்த மாதம் காரை ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடியுடன் வழங்குகிறது.
தற்போது, ஃபிரெஞ்ச் கார் மார்க்கெட்டில் ரூ. 30,000 கேஷ் தள்ளுபடி, நீட்டிக்கப்பட்ட வாரண்டி ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 25,000 அல்லது 60,000 கி.மீ மற்றும் வருடாந்திர பராமரிப்புக்கு ரூ. 50,000 கி.மீ அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 45,000 உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது. மறுபுறம், வாடிக்கையாளர்கள் ரூ. 90,000 கேஷ் தள்ளுபடியையும் தேர்வு செய்யலாம்.
இது 109bhp மற்றும் 190Nm டோர்க்கை உருவாக்கும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆகும். இதில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்பட்டு ஒரு லிட்டருக்கு 18.5 கி.மீ என்ற ஏஆர்ஏஐ- சான்றளிக்கப்பட்ட ஃபியூல் எஃபிஷியன்சியை வழங்குகிறது.
ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகியவை C3 ஏர்கிராஸுக்கு போட்டியாளர்களாகும். இது ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, கியா சோனெட் மற்றும் மஹிந்திரா XUV300 ஆகியவற்றின் டாப்-ஸ்பெக் வேரியண்ட்ஸுடனும் போட்டியிடுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்