- லான்ச் அன்று ஆட்டோமேட்டிக் வெர்ஷனில் இருக்காது
- இந்த மாதம் லான்ச் ஆகலாம்
டர்போ பெட்ரோல் பவர் மற்றும் மைலேஜ்
சிட்ரோன் இந்தியாவில் C3 ஏர்கிராஸ் எஸ்யுவியை 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் லான்ச் செய்யப்படும். இதில் சிக்ஸ்- ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 109bhp பவர் மற்றும் 190Nm டோர்க்கை ஜெனரேட் செய்யும். இதன் எம்டீ வெர்ஷன் பின்னால் வரலாம். இது லிட்டருக்கு 18.5 கி.மீ மைலேஜைத் தரும்.
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் டைமேன்ஷன்ஸ்
சிட்ரோன் C3 ஏர்கிராஸ்4.3 மீட்டரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,இதில் வீல்பேஸ் 2.67 மீட்டர்ஸ், 1.66 மீட்டர் உயரம் மற்றும் 1.79 மீட்டர் அகலம்.இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மி.மீ இருக்கலாம்.
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் விலை மற்றும் லான்ச்
சிட்ரோன் C3 ஏர்கிராஸின் விலை ரூ. 10 லட்சத்தில் இருந்து 15 லட்சம் வரை இருக்கலாம். இந்த விலையில் சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவிஸான கியா சொனேட், ஹூண்டாய் வென்யூ,மஹிந்திரா XUV300 மற்றும் மாருதி பிரெஸ்ஸா உடன் போட்டியிடும். மற்றும் என்ட்ரி லெவலான ஹூண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் உடனும் இது போட்டியிடலாம். செப்டெம்பர் 2023 இல் புக்கிங்ஸைத் தொடங்கி அக்டோபர் 2023 இல் டெலிவரிக்கு ஆரம்பம் ஆகலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்