- செப்டம்பர் 2023 இல் புக்கிங் தொடங்கும்
- சிங்கிள் இன்ஜினில் வழங்கப்படும்
சிட்ரோன் இந்தியா C3 ஏர்கிராஸை ஏப்ரல் 2023 இல் இந்தியாவில் வெளியிட்டது. சிட்ரோன் C3, C5 ஏர்கிராஸ் மற்றும் eC3 க்குப் பிறகு ஃப்ரென்ச் வாகனத் தயாரிப்பாளரின் நான்காவது மாடல் இதுவாகும். C3 இன் கட்டமைப்பின் அடிப்படையில், C3 ஏர்கிராஸ் அதன் வடிவமைப்பை முந்தைய மாடல் C5 ஏர்கிராஸில் இருந்து எடுக்கப்பட்டன, மேலும் ஹூண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போன்றவற்றுக்கு எதிராக போட்டியிடுகிறது. இந்த எஸ்யுவிஸை ஒன்றாக இணைத்து அவற்றின் டைமென்ஷன்ஸை ஒப்பிட்டுப் பார்த்தோம்.
டைமென்ஷன்ஸ் ஒப்பிட்டுகை
அளவீடுகள் | சிட்ரோன் C3 ஏர்கிராஸ் | கியா செல்டோஸ் | ஹூண்டாய் க்ரேட்டா | மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா | மாருதி சுஸுகி பிரெஸ்ஸா |
நீளம் (மி.மீ) | 4,323 | 4,365 | 4,300 | 4,345 | 3,995 |
அகலம் (மி.மீ) | 1,796 | 1,800 | 1,790 | 1,795 | 1,790 |
உயரம் (மி.மீ) | 1,669 | 1,645 | 1,635 | 1,645 | 1,685 |
வீல்பேஸ் (மி.மீ) | 2,671 | 2,610 | 2,610 | 2,600 | 2,500 |
பூட் ஸ்பேஸ் (லிட்டர்) | 511 (மூன்றாவது வரிசை இல்லாத 7 சீட்டர்) 444 (5சீட்டர்) | 433 | 400 | 373 | 328 |
க்ரவுண்ட் க்ளியரன்ஸ் (மி.மீ) | 200 | 190 | 190 | 208 | 200 |
முடிவுரை
இந்த செக்மென்ட்டில் சிட்ரோன் C3ஏர்கிராஸ் மிக நீளமான வீல்பேஸ்மற்றும் அதிக கேபின் ஸ்பேஸ் உள்ளது. மேலும், இந்த எஸ்யுவியின் மூன்றாவது வரிசையில் ஃபோல்டபிள் செவன் சீட்டர் கொண்ட வேரியண்ட்டிற்கு 511 லிட்டரில் மிக உயர்ந்த பூட் ஸ்பேஸை பெற்றுள்ளது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்