- அக்டோபர் 2023 இல் டெலிவரி தொடங்கும்
- சிங்கிள் பவர்ட்ரெயினில் வழங்கப்படும்
ஃப்ரென்ச் கார் மார்க்கான சிட்ரோன், ஏப்ரல் 2023 இல் நாட்டில் முதன்முறையாக C3 ஏர்கிராஸைக் காட்சிப்படுத்தியது. இந்த எஸ்யுவி ஆனது C3, C5 ஏர்கிராஸ் மற்றும் eC3 க்குப் பிறகு பிராண்டின் நான்காவது மாடல் ஆகும். ஃபைவ் மற்றும் செவன் சீட்டர் அமைப்புகளில் வழங்கப்படும். இப்போது, பிராண்ட் தனது வரவிருக்கும் எஸ்யுவிக்கான முன்பதிவுகளை செப்டம்பரில் தொடங்கும் என்றும், அதைத் தொடர்ந்து அக்டோபரில் டெலிவரி செய்யப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஃபீச்சர்ஸ் மற்றும் சேஃப்டி
அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது, C3 ஏர்கிராஸ் பல அம்சங்களை இழக்கிறது. உபகரணங்களின் முன்பக்கத்தில், எஸ்யுவி ஆனது ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 10-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏழு இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கண்ட்ரோல்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு முகப்பில், இது டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்ஸ், டீபீஎம்எஸ், இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றைப் பெறுகிறது.
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் இன்ஜின் மற்றும் மைலேஜ்
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மூலம் 109bhp மற்றும் 190Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த மோட்டார் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டது மற்றும் இது லிட்டருக்கு 18.5 கி.மீ மைலேஜை வழங்கும்.
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் போட்டியாளர்கள்
அறிமுகப்படுத்தப்பட்டவுடன், சிட்ரோன் C3 ஏர்கிராஸ், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் ஹூண்டாய் வென்யூ போன்றவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்