- ஐந்து மற்றும் ஏழு சீட்டர் விருப்பங்களுடன் வழங்கபடும்
- இரண்டு வேரியன்ட்ஸில் கிடைக்கும்
சிட்ரோன் இந்தியா இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட C3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டை நாட்டில் ரூ. 12.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையுடன் மேக்ஸ் மற்றும் ப்ளஸ் என இரண்டு வேரியன்ட்ஸில் லான்ச் செய்தது. இந்த எஸ்யுவி ஐந்து மற்றும் ஏழு சீட்டிங் அமைப்புகளில் இருக்கும்.
சிட்ரோன் c3 ஏர்கிராஸில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது, இதன் மேனுவல் 109bhp மற்றும் 190Nm டோர்க்கையும் அதேசமையம் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் 109bhp மற்றும் 205Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இந்த ஆட்டோமேட்டிக் இன்ஜினில் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் யூனிட்டுடன் வருகிறது.
அம்சங்களை பற்றி பேசுகையில், இதில் ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட், ரிமோட் ஏசி ப்ரீ கண்டிஷனிங், 10-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் உடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்டிவிட்டி, 7 இன்ச் டீஎஃப்டீ க்ளஸ்டர், யுஎஸ்பி சார்ஜர், மூன்றாவது ரோவுக்கு ஏசி வென்ட்ஸ் மற்றும் ஒன்-டச் ஆட்டோ டவுன் கொண்ட பவர் விண்டோஸ் உள்ளது
சிட்ரோன் c3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிகின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
வேரியன்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலை |
ப்ளஸ் ஏடீ 5 சீட்டர் | ரூ. 12.84 லட்சம் |
மேக்ஸ் ஏடீ 5 சீட்டர் | ரூ. 13.49 லட்சம் |
மேக்ஸ் ஏடீ 5+2 சீட்டர் | ரூ. 13.84 லட்சம் |