- சிட்ரோனின் புது டெல்லி டீலர்ஷிப்பில் முதல் கார் டெலிவரி செய்யப்பட்டது
- அனைத்து சிட்ரோன் டீலர்ஷிப்களிலும் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது
சிட்ரோன் இந்தியா பஸால்ட் கூபே எஸ்யுவியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது. முதல் வாகனத்தை சிட்ரோனின் புது டெல்லி டீலர்ஷிப்பில் பிராண்டின் சிஇஓ, தியரி கோஸ்காஸ் டெலிவரி செய்தார். இது தவிர, இந்த வார இறுதிக்குள் மற்ற வாடிக்கையாளர்களுக்கும் டெலிவரி செய்யத் தொடங்கும்.
பஸால்ட் இந்தியாவில் ஆகஸ்ட் 9, 2024 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் ஆரம்ப விலை ரூ. 7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இதற்கிடையில், கூபே எஸ்யுவிக்கான முன்பதிவு ரூ. 11,001 முதல் தொடங்கியுள்ளது. இருப்பினும், அதன் பேஸ் விலை அக்டோபர் 31 வரை செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளுக்கும் செல்லுபடியாகும்.
பஸால்ட் ஆனது 1.2-லிட்டர், த்ரீ-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது என்ஏ மற்றும் டர்போசார்ஜ்ட் வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. இதன் என்ஏ இன்ஜின் 80bhp பவரையும் 115Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது, அதே சமயம் டர்போ இன்ஜின் 109bhp மற்றும் 190Nm (ஏடீக்கு 205Nm) டோர்க்கை உற்பத்தி செய்கிறது. என்ஏ பெட்ரோல் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் டர்போ சிக்ஸ்-ஸ்பீட் எம்டீ அல்லது சிக்ஸ்-ஸ்பீட் ஏடீ உடன் வழங்கப்படுகின்றன.
சிட்ரோன் பஸால்ட்டின் விலை அதிகமாக வைக்கப்படவில்லை, இதன் காரணமாக இந்த கூபே எஸ்யுவி பல செக்மெண்ட்டில் உள்ள மாடல்களுக்கு கடுமையான போட்டியை அளிக்கிறது. இதில் டாடா கர்வ், ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மஹிந்திரா XUV3XO, மாருதி பிரெஸ்ஸா மற்றும் ஃப்ரோன்க்ஸ் ஆகியவை அடங்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்