- ஆகஸ்ட் 2 ஆம் தேதி லான்ச் ஆகும்
- விரைவில் வரவிருக்கும் டாடா கர்வ் உடன் போட்டியிடும்
சிட்ரோன் இந்தியா விரைவில் கூபே எஸ்யுவி செக்மெண்ட்டில் பசாலட் உடன் நுழைகிறது. இது ஆகஸ்ட் 2 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும், அதன் பிறகு பசால்ட்டின் விலை விரைவில் வெளியிடப்படும். பசாலட் வாங்க விரும்பும் வாடிக்கையாளர், சிட்ரோனின் அங்கீகரிக்கப்பட்ட டீலரைத் தொடர்புகொண்டு, தங்கள் முன்பதிவுகளைச் செய்யலாம். இதற்கு வாடிக்கையாளர்கள் ரூ. 25,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
இருப்பினும், இந்த மாடலின் அம்சங்கள் தொடர்பான எந்த தகவலையும் வாகன உற்பத்தியாளர் இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால், சமீபத்தில் இது தொடர்பாக ஒரு டீசர் வெளியிடப்பட்டது, அதில் இருந்து அதன் பல அம்சங்களை எளிதாக யூகிக்க முடியும். இந்த C3 அடிப்படையிலான கூபே எஸ்யுவி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஆர்ம்ரெஸ்ட், சைட் சப்போர்ட் உடன் ஹெட்ரெஸ்ட் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றைப் பெறலாம்.
இது தவிர, வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள்-கார்ப்ளே கனெக்ட், டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்களை இந்த மாடலில் வழங்க முடியும் என்று நம்புகிறோம்.
C3 ஏர்கிராஸில் உள்ள அதே 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் பசால்ட் வழங்கப்படும், இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்டர் யூனிட்டுடன் இணைக்கப்படும். இந்த மோட்டார் 109bhp பவரையும், அதிகபட்சமாக 215Nm டோர்க் திறனையும் உருவாக்கும்.
அறிமுகத்திற்குப் பிறகு, பசால்ட் டாடாவின் கர்வ் உடன் போட்டியை எதிர்கொள்ளக்கூடும் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். அத்தகைய சூழ்நிலையில், நிறுவனம் இந்த மாடலின் எலக்ட்ரிக் வெர்ஷனும் வரும் நாட்களில் அறிமுகப்படுத்தலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்