- C3 ஏர்கிராஸ்க்கு கீழே உள்ள மாடலாகும்
- டாடா கர்வ் உடன் நேரடியாக போட்டியிடும்
சிட்ரோன் இந்தியா இந்த மாத தொடக்கத்தில் கூபே எஸ்யுவி பஸால்ட் ஐ காட்சிப்படுத்தியது. விலை மற்றும் வேரியன்ட்ஸ் தவிர, ஃபீச்சர்ஸ், எக்ஸ்டீரியர் டிசைன் மற்றும் இன்ஜின் விருப்பங்கள் உள்ளிட்ட பல விவரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இப்போது, இந்த காரின் விலையை நாளை அதாவது ஆகஸ்ட் 9, 2024 அன்று ஆட்டோமேக்கர் வெளியிட தயாராக உள்ளது.
பஸால்ட்டின் எக்ஸ்டீரியர் ஆனது C3 ஏர்கிராஸின் பெரும்பாலான டிசைன் எலிமெண்ட்ஸைப் பகிர்ந்து கொள்கிறது, இதில் ஸ்ப்ளிட் எல்இடி டிஆர்எல்கள், குரோம் ஸ்ட்ரிப்ஸில் பிராண்ட் லோகோ, ஃப்ரண்ட் ஃபேரிங் மற்றும் ஃப்லிப் டோர் ஹேண்டல்ஸ் ஆகியவை அடங்கும். மேலும், ஸ்லோப்பிங்க் ரூஃப்லைன், 3D எஃபக்ட் உடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்ஸ், 16-இன்ச் டூயல்-டோன் அலோய் வீல்ஸுடன் கூடிய ஸ்குயர் வீல் அர்ச்செஸ் மற்றும் கூபே போன்ற தோற்றத்திற்கான ரேக்கட் ரியர் விண்ட்ஸ்கிரீன் ஆகியவை இதன் தனிச்சிறப்பு.
இன்டீரியரில், பஸால்ட் ஆனது 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஏழு இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் மேனுவல் ஐஆர்விஎம்களுடன் C3 ஏர்கிராஸ் போன்ற டாஷ்போர்டு அமைப்பைப் பெறுகிறது. புதிய அம்சங்களைப் பற்றி பேசுகையில், பஸால்ட் வயர்லெஸ் சார்ஜர், ஸ்லைடிங் ஃப்ரண்ட் ஆர்ம்ரெஸ்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் அட்ஜஸ்ட்டெபல் தை சப்போர்ட் மற்றும் ரியர் சீட்ஸ்க்கு விங் ஹெட்ரெஸ்ட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, அனைத்து வேரியன்ட்ஸிலும் ஆறு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும்.
சிட்ரோன் பஸால்ட் பிராண்ட் ஜென 3 ப்யூர்டெக் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது என்ஏ மற்றும் டர்போ இன்ஜின் விருப்பங்களில் கிடைக்கிறது. இது முறையே 80bhp/115Nm மற்றும் 109bhp/190Nm டோர்க்கை உற்பத்தி செய்கின்றன. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில், ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்பட்ட என்ஏ இன்ஜின் அடங்கும், அதே சமயம் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்டர் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பஸால்ட்டின் பேஸ் வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை C3 ஏர்கிராஸை விட சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும், இந்த கூபே எஸ்யுவி ஒருவேளை C3 மற்றும் C3 ஏர்கிராஸ்க்கு இடையே நிலைநிறுத்தப்படும். போட்டியைப் பற்றி பேசுகையில், பஸால்ட்டின் நேரடி போட்டி டாடா கர்வ் ஆகும், இருப்பினும் இது ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா XUV 3XO ஆகியவற்றிற்கும் கடுமையான போட்டியாக பஸால்ட் இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்