- பஸால்ட் கூபே இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் வழங்கப்படும்
- இன்னும் சில வாரங்களில் லான்ச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது
கடந்த வாரத்தின் பிற்பகுதியில், சிட்ரோன் நிறுவனம் ஒரு சில வாரங்களில் பஸால்ட் கூபே ஐ லான்ச்க்கு முன்னதாக ப்ரொடக்ஷன்-ரெடி பஸால்ட் கூபே எஸ்யுவியை காட்சிப்படுத்தியது. அதனுடன், கார் தயாரிப்பாளர் அதன் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் பற்றிய விவரங்களை அறிவித்துள்ளது.
புதிய பஸால்ட் கார், இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கும். முதலாவது 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் மோட்டார், இது 80bhp மற்றும் 115Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது, இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பிந்தையது 1.2 லிட்டர், த்ரீ-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 109bhp பவரை உருவாக்குகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களைப் பொறுத்தவரை, இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் டோர்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் யூனிட்டைப் பெறுகிறது, அவை முறையே 190Nm மற்றும் 205Nm டோர்க்கை உருவாக்குகின்றன.
வேரியன்ட் வாரியான சிட்ரோன் பஸால்ட் மைலேஜ் விவரங்கள் பின்வருபவை:
வேரியன்ட் | கியர்பாக்ஸ் | மைலேஜ் (கிமீ) |
1.2 என்ஏ பெட்ரோல் இன்ஜின் | 5எம்டீ | லிட்டருக்கு 18 கிமீ |
1.2 டர்போ பெட்ரோல் இன்ஜின் | 6எம்டீ | லிட்டருக்கு 19.5 கிமீ |
1.2 டர்போ பெட்ரோல் இன்ஜின் | 6ஏடீ | லிட்டருக்கு 18.7 கிமீ |
2024 சிட்ரோன் பஸால்ட்டில் வழங்கப்படும் முக்கிய அம்சங்களில் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், 16-இன்ச் அலோய் வீல்ஸ், ரேப்-அரவுண்ட் டெயில் லைட்ஸ், இரண்டாவது வரிசையில் பயணிகளுக்கான அட்ஜஸ்ட்டெபல் தை சப்போர்ட் ஃபங்ஷன், வயர்லெஸ் கனெக்ட் கொண்ட 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம்,6 ஏர்பேக்குகள் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவை அடங்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்